வீடியோ: மக்களவையில் பிரதமர் மோடியை கட்டியணைத்த ராகுல் காந்தி

பிரதமர் மோடியை கட்டியணைத்த ராகுல் காந்தி

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த தீர்மானம் குறித்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பல கேள்விகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முன் வைத்தார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மாற்றியது ஏன்? ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு உத்தரவாதம் எங்கே? பெண்கள், தலித்களுக்கு எதிராக நாட்டில் நடக்கும் அடக்குமுறைகள் குறித்து மவுனம் காப்பது ஏன்? என்று பல கேள்விகளை ராகுல் அடுக்கினார்.

இறுதியில், மோடியை பார்த்து, ‘நீங்கள் என்னை பப்பு என்றோ, அல்லது வேறு எப்படி வேண்டுமானாலும், அழைத்துக் கொள்ளுங்கள். அதற்காக நான் உங்களை வெறுக்கமாட்டேன்’ என்று கூறிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டியணைத்தார்.


இந்த வீடியோ தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close