Advertisment

வயநாட்டில் 206 பேர் மாயம்: 40 குழுக்கள் தேடுதல் பணி: பினராய் விஜயன்

Wayanad Landslide | வயநாடு நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் ஆறு மண்டலங்களில் நாற்பது குழுக்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pinarayi Vijayan in Wayanad

மீட்புப் பணிகள் குறித்து ராணுவ வீரர்களுடன் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஆலோசனை நடத்தினார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரல்மாலாவில் சனிக்கிழமையும் தேடுதல் பணிகள் நடந்தன. இந்தப் பணியில் 1300க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டனர்.
நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் ஆறு மண்டலங்களில் நாற்பது குழுக்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

மீட்புப் பணிகள்

அட்டமலை மற்றும் ஆறன்மலை (முதல் மண்டலம்), முண்டக்கை (இரண்டாவது), புஞ்சிரிமட்டம் (மூன்றாவது), வெள்ளரிமலை கிராமம் (நான்காவது), ஜிவிஹெச்எஸ்எஸ் வெள்ளரிமலை (ஐந்தாவது), மற்றும் ஆற்றங்கரை (ஆறாவது) ஆகிய இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது.
தேசிய மீட்புப் படையினர் (NDRF), கடலோர காவல்படை, கடற்படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலியாறு ஆற்றில் மும்முனை தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது. ஆற்றங்கரையில் உள்ள எட்டு காவல் நிலையங்கள் உள்ளூர் நீச்சல் நிபுணர்களுடன் சேர்ந்து உடல்களை கீழ்நோக்கி கொண்டுவருகின்றனர்.

பினராய் விஜயன் பேட்டி

இந்த நிலையில் கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடுதல் பணிகள் நடைபெற்றுவருகிறது. 206 பேரை இதுவரை காணவில்லை; அவர்களை தேடும் பணிகள் நடைபெற்றுவருகிறது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Pinarayi Vijayan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment