Advertisment

வயநாடு நிலச்சரிவு: தெய்வமாக வந்து விடியும் வரை குடும்பத்தை காப்பாற்றிய காட்டு யானை

நிலச்சரிவில் எல்லாம் சரிந்து விழுந்த அந்த இரவில், ஒரு காட்டு யானை தெய்வமாக வந்து தங்களைக் காப்பாற்றிய திகைப்பில் இருந்து சுஜாதா இன்னும் மீளவில்லை.

author-image
WebDesk
New Update
Wayanad landslide elephant

Wayanad landslide: Wild tusker shelters woman, family until dawn, she calls it ‘divine intervention’

வனவிலங்குகள் குறிப்பாக காட்டு யானைகள் பெரும்பாலும் மனிதர்களை வேட்டையாடும் கதைதான் நமக்கு தெரியும்.

Advertisment

ஆனால், சுஜாதாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொல்ல வேறு கதை உள்ளது. கேரளாவின் வயநாட்டின் சில பகுதிகளில் பல நிலச்சரிவுகள் தாக்கி, பேரழிவை ஏற்படுத்திய செவ்வாய்க்கிழமை, ஒரு பெரிய காட்டு யானை அவர்களின் உயிரைக் காப்பாற்றியது.

சூரல்மாலாவில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்கின்றன. இதுவரை, 300க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன, 215க்கும் மேற்பட்டோர் இன்னும் காணவில்லை.

நிலச்சரிவில் எல்லாம் சரிந்து விழுந்த அந்த இரவில், ஒரு காட்டு யானை தெய்வமாக வந்து தங்களைக் காப்பாற்றிய திகைப்பில் இருந்து சுஜாதா இன்னும் மீளவில்லை.

’கடல் போல வெள்ளம் வந்தது. மரங்கள் மிதந்து கொண்டிருந்தன. நான் வெளியே பார்த்தபோது, ​​எனது பக்கத்து வீட்டுக்காரரின் இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்து கொண்டிருந்தது. அதில் எங்கள் வீடு நாசமானது.

உள்ளே என் பேத்தி மிருதுளா அழுவதைக் கேட்டேன். நான் அவளது சுண்டு விரலைப் பிடித்து, அவளை இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே இழுத்து ஒரு துணியால் மூடி, வெள்ளத்தில் நீந்த ஆரம்பித்தேன்’, என்று இப்போது மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி நிவாரண முகாமில் இருக்கும் சுஜாதா ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

என் மகன் ஜிகீஷ், மருமகள் சுஜிதா, பேரன் சூரஜ் ஆகியோர் அருகில் உள்ள வீட்டில் இருந்தனர். ஜிகீஷ் அவர்களை ஒவ்வொருவராக வெள்ளத்தில் இழுத்து வந்தான்.  இறுதியாக கரையை அடைந்து ஒரு காபி தோட்டத்தின் வழியாக நாங்கள் சென்றபோது, அந்த பாதையில் யானை இருந்தது

பெரும் சோகத்தில் இருந்து தப்பித்து வருகிறோம். நாங்கள் பயந்து போய் இருக்கிறோம். வெளிச்சம் இல்லை, எங்கு பார்த்தாலும் வெள்ளம்.  எப்படியோ நீந்தி வந்தோம். தயவு செய்து எங்களை எதுவும் செய்யாதே, என்று யானையிடம் கெஞ்சினேன். அதன் அருகில் மேலும் இரண்டு யானைகள் இருந்தது.

எங்களைப் பார்த்த அந்த யானையின் கண்கள் கலங்கியதை நான் பார்த்தேன். அது விடியும் வரை அசையாமல் அங்கேயே நின்றது, அதன் கால்களுக்கு அடியில் நாங்கள் இருந்தோம், என்று அந்த இரவில் நடந்ததை சுஜாதா விவரித்தார்.

Wayanad landslide

மறுநாள் காலை, யாரோ ஒருவர் சுஜாதாவையும் குடும்பத்தினரையும் கண்டுபிடித்து, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று துணி, உணவு மற்றும் தண்ணீரை வழங்கினார்.

அந்த ஆடைகளை அணிந்துகொண்டு சுஜாதாவும், அவரது பேத்தி மிருதுளாவும் மேப்பாடி முகாமுக்கு வந்தனர். மற்ற குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் உள்ளனர்.

கனமழை இருந்தபோதிலும், 40 மீட்புக் குழுக்கள் இன்னும் காணாமல் போனவர்கள் மற்றும் உடல்களைத் தேடி வருகின்றனர்.

உடல்களை கண்டறிவதற்காக டெல்லியில் இருந்து ட்ரோன் அடிப்படையிலான ரேடார் வரவுள்ளதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன் சனிக்கிழமை அறிவித்தார்.

ஆறு நாய்கள் தேடுதலுக்கு உதவுகின்றன, மேலும் தமிழ்நாட்டிலிருந்து நான்கு வரலாம், என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read in English: Wayanad landslide: Wild tusker shelters woman, family until dawn, she calls it ‘divine intervention’

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Wayanad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment