காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக நீடிக்கிறார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Wayanad Lok Sabha Bypoll Results 2024 Updates
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியுடன் நாட்டில் காலியாக உள்ள மற்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற்றது.
காங்கிரஸ் தலைமையிலான யு.டி. எப் வேட்பாளர் பிரியங்கா காந்தி, சி.பி.ஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரி மற்றும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இன்று சனிக்கிழமை (நவ.23) நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“