scorecardresearch

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் ரங்கசாமி

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

Cm Rangasamy
Cm Rangasamy

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு 2006-ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டம் 100 நாள் வேலை திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. புதுச்சேரியில்
பல ஆண்டாக இந்த திட்டத்தில் பணிகள் நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. சட்டசபையிலும் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் மீது புகார் தெரிவித்தனர்.

குறைகள் களையப்பட்டு திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு முறையாக வேலையை ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. வனத்துறை ஒத்துழைப்புடன் நாற்றுப் பண்ணைகள் அமைத்தல், காடு வளர்ப்பு உட்பட பல திட்டங்களில் வேலை நடத்தப்பட உள்ளது. தொண்டமாநத்தத்தில் இன்று (மே 16) நடைபெற்ற நாற்று பண்ணை திட்ட விழாவில் விதைகளை தூவி திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார். இந்த அரசு பொறுப்பேற்றவுடன் 100 நாட்கள் வேலை திட்டத்தை முறைப்படுத்தி வருகிறோம். புதுச்சேரிக்கு ரூ.20 கோடியாக இருந்த நிதியை ரூ.100 கோடியாக அமைச்சர் பெற்று வந்துள்ளார். இதனால் ஆண்டுக்கு 100 நாள் வேலை தர முடியும். இதேபோல சாலை பணிக்கான நிதியும் முழுமையாக செலவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தினால் அதற்கான நிதியை பெற முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. நடைமுறையில் இருந்த பல திட்டங்கள் முடங்கிப் போனது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நலத்திட்டங்கள், அறிவித்தபடி முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

27 ஆயிரம் பேருக்கு புதிதாக உதவித்தொகை வழங்கியுள்ளோம். அனைவருக்கும் 10-ம் தேதிக்குள் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி விட்டோம். சீருடை வழங்கி வருகிறோம். லேப்டாப் வழங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் லேப்டாப் வழங்கப்படும் என்று கூறினார்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: We alloted rs 60 crore for purchasing laptops to students says cm rangasamy

Best of Express