தவறாக வழிநடத்த நாங்கள் குழந்தைகள் அல்ல : அசாதுதீன் உவைசி

நாட்டின் இஸ்லாம் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படும் என்ற அடிப்படையில் தான் குடியுரிமை மசோதா  எதிர்க்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம்  குறித்து, சிலர் எங்கள் இஸ்லாம் சகோதரர்களை தவறாக வழிநடத்தியுள்ளனர் என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கருத்தை ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் உவைசி கடுமையாக எதிர்த்தார்.

அசாதுதீன் உவைசி தனது ட்விட்டர் பதிவில், ” தவறாக வழிநடத்த நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. குடியுரிமை சட்டத்தோடு, தேசிய குடிமக்கள் பதிவேடு இணைக்கப்பட்டால் என்ன நடக்கும்  என்பதை பிஜேபி வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கிறது. இது எந்த இஸ்லாம் மதத்தை என்றால், மதத்தைப் பற்றிய அனைத்து குறிப்புகளையும் சட்டத்திலிருந்து நீக்குங்கள் ”என்று தெரிவித்தார்.

முன்னதாக,  நாக்பூரில் நடந்த வருடாந்திர விஜயதாஷாமி பேரணியில் பேசிய பகவத்,”​ஆர்எஸ்எஸ் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது அல்ல. ஆனால், சிலர் தவறான கருத்துக்கள் மூலம் எங்கள் இஸ்லாம் சகோதரர்களை தவறாக வழிநடத்தினர்” என்று கூறினார்.

“நாட்டின் இஸ்லாம் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படும் என்ற அடிப்படையில் தான் குடியுரிமை மசோதா  எதிர்க்கப்பட்டது. உண்மையில், குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் எந்த மதத்தையும், குடிமகனையும் பாதிக்காது ,”என்று அவர் கூறினார்.

இந்த பிரச்சினை மேலும் விவாதிக்கப்படுவதற்கு முன்னர், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பக்கம் கவனம் திரும்பியது. இதனால், சட்ட அம்சங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறமால் போனது என்று அவர் கூறினார்.

குடியுரிமையை மதத்தோடு இணைக்கும் எந்தவொரு சட்டமும் கடுமையாக எதிர்க்கப்படும் என்றும் அசாதுதீன் உவைசி வலியுறுத்தினார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: We are not kids to be misguided owaisi responds to rss chiefs caa remarks

Next Story
குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி தேசிய விரோத அமைப்பா? பாரூக் அப்துல்லா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com