scorecardresearch

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராஜஸ்தான் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

ராஜஸ்தான் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கியான் தேவ் அகுஜா, பசு வதையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள் என்று பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் கியான் தேவ் அகுஜா மேலும் பேசுகையில், நாங்கள் இதுவரை 5 பேரை அடித்துக் கொலை செய்துள்ளோம். பசு வதையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொல்லுங்கள். எந்த தயக்கமும் இன்றி சுதந்திரமாக கொலை செய்ய நான் அனுமதி கொடுத்துள்ளேன். அவர்களுக்கு ஜாமீனையும் விடுதலையும் பெற்று தருகிறோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் ஆதரவாளர்கள் இடையே அவர் பேசியுள்ளார்.

வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் நோக்கில் ஈடுபடுவதாக கியான் தேவ் மீது 153 ஏ பிரிவின் கீழ் ராஜஸ்தான் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா கூறுகையில், பா.ஜ.க.வின் மத பயங்கரவாதம் மற்றும் மதவெறிக்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பா.ஜ.க.வின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது என்று அவர் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: We have killed 5 says ex bjp rajasthan mla

Best of Express