இண்டெர்போலின் உதவியுடன், நீரவ் கடந்த வாரம், பயணித்த நாடுகளின் பட்டியலை தேதியுடன் வெளிட்டது மத்திய உளவுத்துறை அமைச்சகம். ஆனால் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி என்பது, எப்படி நீரவ் மோடியினால் முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி நான்கு நாடுகளுக்கு பயணிக்க முடிந்தது என்பது தான். பிப்ரவரியில் நீரவ் மற்றும் அவருடைய தாய்மாமன் சோக்ஷி ஆகியோருடைய பாஸ்போர்ட் முடக்கப்ப்பட்ட பின்பு, மத்திய உளவுத்துறை ஆறு முக்கிய நாடுகளில் இருக்கும் இண்டெர்போல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
நீரவ் மோடி இந்தியாவில் இருந்து வெளியேறிய பின்னர், அவர் குறிப்பிட்ட ஆறு நாடுகளில் தலைமறைவாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்ற சந்தேககிக்கின்றது மத்திய உளவுத்துறை. அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஃப்ரான்ஸ், சிங்ப்பூர், மற்றும் அமீரகம் ஆகிய நாடுகளுக்கு தகவல்களை அளித்திருக்கின்றது சிபிஐ. நீரவ் மோடியின் செயல்பாடு குறித்து அந்தந்த நாடுகளில் இருக்கும் இண்டர்போல் அதிகாரிகளிடம் வாரம் தோறும் பேசியது, சிபிஐ. மேலே குறிப்பிட்டுள்ள ஆறு நாடுகளுக்கும் ஏப்ரல் 25, மே 22, மே 24, மற்றும் மே 28 தேதிகளில் சிபிஐ கடிதம் அனுப்பியிருக்கின்றது.
இது குறித்து சிபிஐ அதிகாரி கூறிய அறிக்கையில் “மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட பின்பு, அவரைப் பற்றிய தகவலை இண்டர்போலின் டேட்டா பேஸில் இணைத்திருக்கின்றார்கள். இந்த டேட்டா பேஸ் அனைத்து நாடுகளின் இண்டெர்போல் அதிகாரிகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கின்றது.
அமலாக்கத்துறை அனுப்பிய தகவல் படி, நீரவ் மோடியிடம் ஆறு பாஸ்போர்ட்கள் இருக்கின்றன. அதில் சில பாஸ்போர்ட்களில் வேறு நபர்களின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றது. ஒரே ஒரு பாஸ்போர்ட்டில் மட்டும் நீரவ் என்ற பெயர் இருக்கின்றது. மற்றோரு பாஸ்போர்ட்டில் நீரவ் என்ற பெயருடன் அவருடைய இரண்டாவது பெயரும் அவருடைய தகப்பனார் பெயரும் இடம் பெற்றிருக்கின்றது.
இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய சிபிஐ அதிகாரி ஒருவர், “இந்த முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி பல்வேறு முறை வெவ்வேறு நாடுகளுக்கு நீரவ் பயணித்தது கண்டறியப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் முடக்கப்படுவதற்கு முன்னர் ஜான்.எப்.கென்னடி விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி 10ம் தேதி அமெரிக்காவில் இருந்து ஹீத்ரூ, இங்கிலாந்திற்கு பயணித்துள்ளார். பிப்ரவ்ரி 15ம் தேதி அவர் ஹாங்காங்கிலிருந்து ஹீத்ருவிற்கு மறுபடியும் பயணித்திருக்கின்றர். ” என்று கூறியுள்ளார்கள்.
பிப்ரவரி 23ன் தேதி நீரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டடது. அந்த பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி மார்ச் 15ம் தேதி ஹீத்ருவிலிருந்து ஹாங்காங்கிற்கு பயணித்திருக்கின்றார், மார்ச் 28ம் தேதி ஜான்.எப்.கென்னடி விமான நிலையத்தில் இருந்து ஹீத்ருவிற்கு பயணித்திருக்கின்றார். ஆனால் இதற்கிடைப்பட்ட நேரத்தில் அவர் பயணித்த இடங்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. மார்ச் 31ம் தேதி ஹீத்ருவிலிருந்து பாரிஸின் சார்லஸ் டீ கயுல்லேவிற்கு பயணித்திருந்தது தெரிய வந்திருக்கின்றது.