பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரம் தொடங்கியதும், காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, லோக்சபாவில் 2024 யூனியன் பட்ஜெட் குறித்துப் பேசினார்.
அப்போது, பட்ஜெட்டின் ஒரே நோக்கம் "பெருவணிகங்களின் ஏகபோகத்தை வலுப்படுத்துவது" என்று குற்றஞ்சாட்டினார். மேலும், நாட்டின் விவசாயிகளுக்கு அவர்கள் (என்டிஏ) செய்யாததை நாங்கள் செய்வோம் என்று சொல்ல விரும்புகிறேன். உத்திரவாதமான சட்ட எம்.எஸ்.பி.க்கான மசோதாவை இந்த அவையில் நிறைவேற்றுவோம்.
ஆங்கிலத்தில் வாசிக்க
தொடர்ந்து, தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியை குறிப்பிட்டு ராகுல் காந்தி, "பிரதமர் மோடி A1 மற்றும் A2 ஐ பாதுகாக்க விரும்புகிறார், நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்று கூறுகிறார்.
வினாத்தாள் கசிவு இளைஞர்களைப் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை, ஆனால் நிதியமைச்சர் தனது உரையில் அதைக் குறிப்பிடவில்லை” என்றார்.
மேலும், பாரதிய ஜனதாவின் சக்கர வியூகத்தை உடைப்போம் என்றார். அதாவது சாதிவாரி கணக்கெடுப்பு மூலமாக இதனை உடைப்போம்” என்றார்.
அப்போது பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு சக்கரவியூகத்தில் அபிமன்யு சிக்கிக்கொண்டதுபோல், பிரதமர் மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி மற்றும் அதானி ஆகிய 6 பேரிடம் இந்தியா சிக்கிக் கொண்டுள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“