சீனா தனது கடுமையான 'ஜீரோ-கோவிட்' கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அங்கு கோவிட் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் நிலைமையை மதிப்பாய்வு செய்து, வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சீரற்ற மாதிரி சோதனை நடத்த விமான நிலையங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில், நாடுகளில் நோய்த்தொற்றின் நிலை மற்றும் தற்போதைய சூழ்நிலையைக் கையாள்வதில் இந்தியாவின் தயார்நிலையைப் பகிர்ந்து கொண்டார்.
அதில், சில நாடுகளில் #COVID19 வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இன்று நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நிலைமையை மதிப்பாய்வு செய்தேன். கோவிட் இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஓமிக்ரான் சப்வேரியண்ட் BF.7 இன் மூன்று பாதிப்புகள் இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. BF.7 என்பது ஓமிக்ரான் மாறுபாடு BA.5 இன் துணைப் பரம்பரையாகும், இது வலுவான தொற்றுத் திறனைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் BF.7 இன் முதல் பாதிப்பு அக்டோபர் மாதம் குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தால் கண்டறியப்பட்டது. இதுவரை, குஜராத்தில் இருந்து இரண்டு பாதிப்புகளும், ஒடிசாவில் இருந்து ஒரு பாதிப்பும் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மருத்துவ எச்சரிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. ஏனெனில், டிசம்பர் 20, 2022 அன்று நாடு முழுக்க பதிவான தினசரி புதிய பாதிப்புகளில் 84 சதவீதம் இந்த ஐந்து மாநிலங்களில் உள்ளன.
இந்த நிலையில் நாடு முழுக்க பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/