Cyclone Vayu Gujarat Live Updates: மிகக் கடினமான தாக்கத்துடன் இன்று குஜராத்தில் கரையைக் கடக்கிறது ‘வாயு’ புயல்.
Cyclone Vayu Land Fall Live Updates
இதனால் கடலோரத்தில் வாழும் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று மதியம் துவாரகா மற்றும் வேரவலுக்கு இடையே இப்புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தின் 10 மாவட்டங்களில் நேற்றும் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.
ராணுவம், NDRF personnel, IAF ஹெலிகப்டர்கள், 300 கடற்படை வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
Live Blog
Cyclone Vayu Live Updates
வாயு புயல் லைவ் அப்டேட்ஸ்!
வாயு புயல் கரையைக் கடப்பதையடுத்து, குஜராத்தில் கடலோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால், அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை எண் 9-ம் எண் கொடியை உயர்த்தும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமானது முதல் மிக கனமான மழை பெய்து வருகிறது.
வாயு புயல் இன்று குஜராத்தில் கரையைக் கடக்கிறது. இதற்காக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் புயலின் தற்போதைய நிலையை தேசிய பேரிடர் மேலாண்மை குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
#CycloneVayu Bulletin:
IMD pic.twitter.com/15A4NZjNij
— NDMA India (@ndmaindia) 13 June 2019
வேரவல் - அம்ரேலி, அம்ரேலி - ஜுனாகத், தேல்வதா - வேரவல் ஆகிய இடங்களுக்கு இடையே இயங்கும் ரயில்கள் நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்காக சிறப்பு ரயில்களை இயக்க மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ராஜ்கோட் மண்டலத்திற்கும், பாவ்நகர் மண்டலத்திற்கும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, கடலோர மாவட்ட மக்களை அப்புறப் படுத்துகிறார்கள்.
வாயு புயல் இன்று குஜராத்தில் கரையைக் கடப்பதால், அரபிக் கடலோரம் வெறிச்சோடி காணப்படுகிறது. கீழே இருக்கும் படங்கள் மும்பையிலுள்ள மஹிம் பீச்சினுடையது. குஜராத்தை வாயு புயல் தாக்காது எனத் தெரிவித்திருக்கும் இந்திய வானிலை மையம், இப்புயல் கரையைக் கடக்கும் போது கடலோரப் பகுதிகளில் அதிக காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்திருக்கிறது.
Maharashtra:Beaches closed for public in Konkan region in view of cyclonic formation Vayu in Arbian Sea;#Visuals from Mahim beach in Mumbai. As per IMD's latest update,#CycloneVayu won't hit Gujarat;its effect will be seen on coastal regions in forms of heavy wind speed&high rain pic.twitter.com/pw5TL14fpr
— ANI (@ANI) 13 June 2019
வாயு புயல் காரணமாக இன்று காலை சீக்கிரமே சோம்நாத் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள்.
Gir Somnath: Devotees visited Somnath Temple earlier this morning despite alert issued in view of #CycloneVayu. pic.twitter.com/NUVheW9HBz
— ANI (@ANI) 13 June 2019
அரபிக் கடலில் தீவிரமடைந்துள்ள வாயு புயல் குஜராத்தை தாக்காது
- இந்திய வானிலை ஆய்வு மையம் #Vayucyclone2019 #Gujarat pic.twitter.com/Ddbpnka6Ax
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 13 June 2019
#WATCH Gujarat: Visuals from Chowpatty beach in Porbandar as the sea turns violent. #CycloneVayu is very likely to cross Gujarat coast between Porbandar and Mahuva as a very severe cyclonic storm, today. pic.twitter.com/NnCornrMqe
— ANI (@ANI) 13 June 2019
கடுமையான தாக்கத்துடன் வாயு புயல் இன்று மதியம், குஜராத்தில் கரையைக் கடக்கிறது. துவாரக மற்றும் வேரவலுக்கு இடையே இது நடக்கிறது. இதனால் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பள்ளி கல்லூரிகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மேற்கூறிய 10 மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights