Advertisment

பாராளுமன்ற பாதுகாப்பு மீறல்: நினைவுக்கு வரும் டிசம்பர் 13, 2001 தாக்குதல்

பாராளுமன்றத்தில் புகை குண்டுகள் வீச்சு; 22 வருடங்களுக்கு முன் இதே நாளில் நடந்த தீவிரவாத தாக்குதலை நினைவுப்படுத்துகிறது

author-image
WebDesk
New Update
parliament attack

டிசம்பர் 13, 2001 அன்று பாராளுமன்ற கட்டிடத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு கட்டுப்பாட்டை எடுக்க NSG வந்தது. (எக்ஸ்பிரஸ் காப்பகம்: பிரவீன் ஜெயின்)

Divya A

Advertisment

டிசம்பர் 13, 2001 அன்று, ஒன்பது பேர் கொல்லப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தின் மீதான தாக்குதலுக்கு சரியாக 22 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை (டிசம்பர் 13, 2023) பாராளுமன்றத்திற்குள் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டது.

ஆங்கிலத்தில் படிக்க: Wednesday’s Parliament security breach: Recalling Dec 13, 2001, attack

டிசம்பர் 13, 2001 அன்று காலை 11.40 மணியளவில், ஐந்து பயங்கரவாதிகள் சிவப்பு விளக்கை ஏற்றிக்கொண்டும், உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கரை கண்ணாடியில் ஒட்டிக் கொண்டும் அம்பாசிடர் காரில் பழைய பார்லிமென்ட் கட்டிட வளாகத்திற்குள் நுழைந்தனர். பின்னர் அந்த ஸ்டிக்கர் போலி என கண்டறியப்பட்டது.

பில்டிங் கேட் எண். 12ஐ நோக்கி அம்பாசிடர் கார் நகர்ந்தபோது, ​​பார்லிமென்ட் அவை காவலர்கள் மற்றும் வார்டு ஊழியர்களில் ஒருவர் சந்தேகமடைந்து, வாகனத்தை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பினார். திரும்பியபோது, ​​அம்பாசிடர் அப்போதைய துணை ஜனாதிபதி கிரிஷன் காந்த் வாகனம் மீது மோதியது, அதன் பிறகு பயங்கரவாதிகள் கீழே இறங்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதற்குள், அலாரம் எழுப்பப்பட்டது மற்றும் அனைத்து கட்டிட கதவுகளும் மூடப்பட்டன. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த துப்பாக்கிச் சூட்டில், எட்டு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு தோட்டக்காரருடன் ஐந்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். குறைந்தது 15 பேர் காயமடைந்தனர்.

ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், வெடி குண்டுகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை தீவிரவாதிகள் வைத்திருந்தனர்.

இந்த சம்பவத்திற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக ராஜ்யசபா மற்றும் லோக்சபா ஆகிய இரண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே அத்வானி, பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஹரின் பதக் உட்பட பல எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்றக் கட்டிடத்திலேயே இருந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும் கட்டிடத்தின் உள்ளே இருந்தனர். அவர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.

பின்னர் லோக்சபாவில் அத்வானி, “பாராளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலை பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் மற்றும் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) கூட்டாகச் செயல்படுத்தியது இப்போது தெளிவாகிறது,” என்று கூறினார்.

அத்வானி மேலும் கூறியதாவது: இந்த இரண்டு அமைப்புகளும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவையும் அனுசரணையும் பெறுவதாக அறியப்படுகிறது. இதுவரை போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலைப்படையாக மாறிய 5 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது இந்திய கூட்டாளிகள் பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த சில நாட்களுக்குள், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு நான்கு நபர்களை கைது செய்ததாக அறிவித்தது, பயங்கரவாதிகள் பயன்படுத்திய கார் மற்றும் செல்போன் பதிவுகள் தொடர்பான லீட்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் கூறினர். கைது செய்யப்பட்டவர்கள்: முகமது அப்சல் குரு, முன்னாள் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எஃப்) போராளி; அவரது உறவினர் ஷௌகத் ஹுசைன் குரு; ஷௌகத்தின் மனைவி அப்சன் குரு; மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரபு மொழி விரிவுரையாளர் எஸ்.ஏ.ஆர் ஜிலானி.

இந்த சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. தாக்குதல் நடந்த அதே நாளில், அப்போதைய இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அஷ்ரப் ஜஹாங்கீர் காசியிடம், லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும், அந்த அமைப்புகளின் தலைவர்களைக் கைது செய்து அவர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற வேண்டும் என்றும் பாகிஸ்தானிடம் இந்தியா கோரியது.

அதன் பின்னர் ஆபரேஷன் பராக்ரம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 11 மாத கால எல்லைப் போருக்கு வழிவகுத்தது. இதில் அதிக அளவிலான துருப்புகள் பயன்படுத்தப்பட்டன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Parliament
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment