அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (ஜன.22) நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க உத்தரப் பிரதேச அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலையோரம் 100 மேடைகள் அமைக்கப்பட்டு அதில் 2,500 நாட்டுப்புறக் கலைஞர்கள் நடமாட உள்ளனர் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
உ.பி-ன் கலாச்சாரத் துறை அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து பிரபல நாட்டுப்புறக் கலைஞர்கள் சிலரை இணைத்துள்ளது. காலை 10.25 மணியளவில் பிரதமர் தரையிறங்கும் அயோத்தி விமான நிலையத்தில் இருந்து ராமர் கோயில் வளாகத்தின் நுழைவு வாயில் வரை நாட்டுப்புறக் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கான மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநில கலாச்சாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நடனம், இசை, பாடல் எனப் பல்வேறு வடிவங்களில் நாட்டுப்புறக் கலைஞர்கள் திரேதா யுகத்தின் சிறப்பை அயோத்தியில் வெளிப்படுத்துவார்கள். இந்த நிகழ்விற்கான ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது என்றார்.
மோஹித் சௌராசியா, ராஜேஷ் உபாத்யாய் மற்றும் வாரணாசியைச் சேர்ந்த தீபக் சர்மா ஆகியோர் டம்ரு வாசிக்கிறார்கள்.
அயோத்தியின் ராஜீவ் லோச்சன் மிஸ்ரா சங்கை முழங்குகிறார். காஜிபூரின் சுல்து ராம்; சஞ்சய் குமார் மற்றும் அசம்கரை சேர்ந்த சுனில் குமார்; மற்றும் முன்னா லால் தோபியா ஆகியோர் நாட்டுப்புற நடனம் ஆடுவார்கள். கோரக்பூரின் சேடி யாதவ், ராம்கியான் மற்றும் விந்தியாச்சல் ஆசாத் ஆகியோர் ஃபருவாஹி நடனத்தையும், கோரக்பூரின் சுகம் சிங் ஷெகாவத் மற்றும் ராகேஷ் குமார் குழுவினர் வந்தங்கிய பழங்குடியினரின் நாட்டுப்புற நடனத்தையும் ஆட உள்ளனர்.
மேலும், லக்னோவின் ஜூஹி குமாரி அவாதி மற்றும் மான்சி விஷ்ட் ஆகியோர் உத்தரகாண்ட் நடனத்துடன் விருந்தினர்களை வரவேற்பார்கள். மதுராவைச் சேர்ந்த கஜன் சிங் மற்றும் மஹிபால் பாம் ரசியா மற்றும் ராஜேஷ் ஷர்மா-மாணிகா, மாதவ் ஆச்சார்யா மற்றும் கீத்கிருஷ்ண ஷர்மா ஆகியோர் ப்ராஜின் மயில் நாட்டுப்புற நடனத்தை நிகழ்த்துவார்கள்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/lucknow/to-welcome-pm-100-stages-lined-up-for-2500-folk-artistes-to-perform-9121029/?tbref=hp
ஜான்சியைச் சேர்ந்த பிரதீப் சிங் பதாரியாவின் குழுவினர் ராய் நாட்டுப்புற நடனத்தை நிகழ்த்துவார்ககள் என்று அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“