Advertisment

மரண தண்டனை: மேற்கு வங்க அரசின் புதிய பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதா கூறுவது என்ன?

மேற்கு வங்க அரசின் புதிதாக வரைவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதா, பாலியல் பலாத்கார குற்றவாளிகளின் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மரணம் அடைந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முன்மொழிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
West Bengal anti-rape Bill

In new Bengal Bill, death sentence for rape if victim dies, becomes vegetative

கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான விதிகளை திருத்தம் செய்து அறிமுகப்படுத்துவதன் மூலம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, மேற்கு வங்க அரசின் புதிதாக வரைவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதா, பாலியல் பலாத்கார குற்றவாளிகளின் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மரணம் அடைந்தால், அல்லது கோமா நிலைக்கு சென்றால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முன்மொழிகிறது.

Advertisment

‘அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் மசோதா (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்) மசோதா 2024’ என்ற தலைப்பில் இந்த மசோதா செவ்வாய்க்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. 

கடந்த மாதம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து

படுகொலை செய்யப்பட்டதை அடுத்து திங்கள்கிழமை தொடங்கி இரண்டு நாள் சிறப்பு அமர்வுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

பலாத்காரம் மற்றும் கூட்டுப் பலாத்காரம் செய்த மற்ற குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும், ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று வரைவு கூறுகிறது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட பாரதிய நியாய் சன்ஹிதா 2023, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டம், 2012 ஆகியவற்றின் விதிகளைத் திருத்த இந்த வரைவு மசோதா முன்மொழிகிறது.

விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் செயல்முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்வைக்கும் மசோதா, பாலியல் வன்கொடுமை வழக்குகள் மீதான விசாரணையை ஆரம்ப அறிக்கையின் 21 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறுகிறது. இது முந்தைய இரண்டு மாத காலக்கெடுவைக் குறைக்கிறது.

காவல் நிலையப் பொறுப்பதிகாரி வழக்குப் பதிவு செய்த தேதியிலிருந்து 21 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க முடியாவிட்டால், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 இன் பிரிவு 192-ன் கீழ் பராமரிக்கப்படும் வழக்குக் குறிப்பில் காரணங்களை எழுத்துப்பூர்வமாக பதிவுசெய்த பிறகு, காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது அதற்கு இணையான பதவிக்குக் குறையாத எந்தவொரு காவல்துறை அதிகாரியும் 15 நாட்களுக்கு மிகாமல் காலத்தை நீட்டிக்க முடியும்.  

இத்தகைய வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும் திருத்தங்கள் முன்மொழிகின்றன.

விசாரணைகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்யவும், பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் விசாரணைக் குழுக்களை இந்த மசோதா முன்மொழிகிறது. இந்த சிறப்புப் பிரிவுகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை

வழக்குகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை திறமையாகவும், திறம்படவும், சரியான நேரத்தில் கையாளவும் தேவையான ஆதாரங்கள் மற்றும் நிபுணத்துவத்துடன் நிறுவப்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அனுபவிக்கும் காயத்தைக் குறைக்கும், என்று வரைவு மசோதா கூறுகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க "அபராஜிதா பணிக்குழு" அமைக்கப்படும். இந்த குற்றங்களை விசாரிக்க மாவட்ட அளவில் பணிக்குழு அமைக்கப்பட்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் செயல்பட வேண்டும் என்று மசோதா கூறுகிறது.

Read in English: In new Bengal Bill, death sentence for rape if victim dies, becomes vegetative

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment