மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்ற போது பொது மக்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக 3 எஃப்.ஐ.ஆர்கள் மேற்கு வங்க காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 2 எஃப்.ஐ.ஆர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் மீதும், ஒரு எப்.ஐ.ஆர் இ.டி அதிகாரிகள் மீதும் போடப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது "குற்றவியல் அத்துமீறல்" மற்றும் "ஒரு பெண்ணின் அடக்கத்தை சீற்றம் செய்யும் நோக்கம்" என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள் விநியோக முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத் உறுப்பினர் ஷாஜஹான் ஷேக் என்பவரது வீட்டை சோதனையிட அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு சென்ற போது, அதிகாரிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் கும்பலால் தாக்கப்பட்டனர். போலீசார் கூறுகையில், ஷேக் வீட்டின் பராமரிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் ஒன்றும், வெள்ளிக்கிழமை இ.டி அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொன்றும், மூன்றாவது போலீசார் தாமாக முன்வந்து ஒரு எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
எந்தவொரு சோதனை முன் அறிவிப்பு, ஆணை வழங்காமல் மற்றும் சட்டத்தை மீறும் வகையில் இ.டி அதிகாரிகள் டி.எம்.சி தலைவரின் இல்லத்திற்குள் வலுக்கட்டாயமாகச் செல்ல முயன்றனர் என்று புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ED அதிகாரிகளுக்கு எதிராக எஃப்ஐஆர் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 441 (குற்றவியல் அத்துமீறல்), 379 ( அத்துமீறல்) மற்றும் 354 (ஒரு பெண்ணின் அடக்கத்தை மீறுதல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற இரண்டு எஃப்ஐஆர்கள் ஐபிசி பிரிவுகள் 147, 148, 149 (கலவரம்) மற்றும் 353 (அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இது மிகவும் முக்கியமான வழக்கு. எஃப்ஐஆர்கள் குறித்து நான் எதுவும் கூற முடியாது. எப்படியிருந்தாலும், நான் தற்போது காவல் நிலையத்திற்கு வெளியே இருக்கிறேன். எனவே தயவுசெய்து என்னை அழைக்க வேண்டாம், ”என்று நயாசாட் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் சுபாசிஷ் பிரமானிக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
பஷீர்ஹாட் போலீஸ் மாவட்ட எஸ்.பி ஜே.தாமஸுக்கு சனிக்கிழமை இது குறித்து கேட்ட தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை. வெள்ளிக் கிழமை அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக போலீசார் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. இருப்பினும் 3 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் காயமடைந்த இரண்டு இ.டி அதிகாரிகள், அங்கூர் குப்தா மற்றும் சோம்நாத் தத்தா ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மூன்றாவது அதிகாரியான ராஜ்குமார் ராம், தலையில் காயம் அடைந்து உயர் சார்பு பிரிவில் (HDU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிக் கிழமை இ.டி அறிக்கையில் கூறுகையில், திகாரிகள் குழு காலையில் சந்தேஷ்காலியில் உள்ள ஷேக்கின் வீட்டிற்கு வந்ததாக கூறியது. வீடு பூட்டப்பட்டிருந்தது, அழைப்புக்கு யாரும் பதிலளிக்கவில்லை. ஷேக்கின் "மொபைல் (தொலைபேசி) இருப்பிடம் அவர் வீட்டிற்குள் இருப்பதைக் குறிக்கிறது" என்று இ.டி குற்றம் சாட்டியது.
இ.டி குழு காத்திருந்தபோது, ஒரு பெரிய கூட்டம், பெரும்பாலும் ஷேக்கின் ஆதரவாளர்கள், அங்கு கூடி, இ.டி குழுவுடன் வந்த மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) பணியாளர்களை விரட்டினர். கூட்டம் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியது மற்றும் சாலைகளை மறித்தது.
இதில் 3 இ.டி அதிகாரிகள் காயமடைந்ததாகவும், அவர்களின் தனிப்பட்ட உடமைகள் மற்றும் மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பணப்பைகள் போன்ற உத்தியோகபூர்வ பொருட்கள் பறிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
ஷேக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்
டி.எம்.சி ஜில்லா பரிஷத் உறுப்பினரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது 4 சகோதரர்களுக்கு இ.டி சனிக்கிழமை லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டது. அமலாக்கத் துறை இதுகுறித்து புலனாய்வுப் பணியகம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு தெரிவித்துள்ளது. ஷேக் மற்றும் அவரது குடும்பத்தினர் "அண்டை நாடான பங்களாதேஷிற்குள் ஊடுருவ முயற்சி செய்யலாம்" என்று அலர்ட் செய்துள்ளளதாக பி.டி.ஐ செய்தி தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/day-after-attack-on-ed-team-its-officials-are-booked-in-bengal-9098370/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.