/tamil-ie/media/media_files/uploads/2019/08/mamata-banerjee.jpg)
West Bengal CM Mamata Banerjee prepares tea, டீ கடைக்குச் சென்ற மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, Mamata Banerjee, west bengal, dhiga,
West Bengal CM Mamata Banerjee prepares tea: மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் உள்ள ஒரு தேநீர் கடைக்குச் சென்று தேநீர் கலந்து கொடுத்த சம்பவம் பொதுமக்களை கவர்ந்துள்ளது. அவர் தேநீர் கலந்துகொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
#WATCH West Bengal Chief Minister Mamata Banerjee prepares tea & serves it to locals in Duttapur, Digha. (Video Source - Mamata Banerjee's twitter handle) pic.twitter.com/UGZAjKG02H
— ANI (@ANI) August 21, 2019
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் உள்ள திகா பகுதியில் பாதுகாப்பு வாகனங்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது மம்தா பானர்ஜி திடீரென வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார். இதையடுத்து வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய மம்தா பானர்ஜி அங்கே சாலையோரம் இருந்த தேநீர் கடைக்கு சென்று தேநீர் கடைக்காரரிடம் தேநீர் போடும் பாத்திரத்தை வாங்கி தேநீர் தயாரித்துள்ளார்.
இதையடுத்து, கடைக்கு வெளியே மேஜையில் அமர்ந்திருந்த அமைச்சர்கல் சுவேண்டு அதிகாரி, சுப்ரதா முகர்ஜி ஆகியோருடன் அமர்ந்து தான் தயாரித்த தேநீரை அனைவருக்கும் தருமாறு கடைக்காரரிடம் கூறியுள்ளார்.
கடைக்காரரும் அவர்களுக்கு தேநீர் எடுத்துதர மம்தா அவர்களுக்கு தேநீர் கொடுத்தார். இந்த சம்பவம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திடீர் வருகையைக் கேள்விபட்டு அருகாமையில் இருந்த மக்கள் கூட்டம் கூடிவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.