திடீரென டீ கடைக்குள் சென்று தேநீர் தயாரித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

West Bengal CM Mamata Banerjee prepares tea and serves: மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திடீரென ஒரு கடைக்குச் சென்று தேநீர் கலந்து கொடுத்த சம்பவம் பொதுமக்களை கவர்ந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

By: August 22, 2019, 9:06:39 PM

West Bengal CM Mamata Banerjee prepares tea: மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் உள்ள ஒரு தேநீர் கடைக்குச் சென்று தேநீர் கலந்து கொடுத்த சம்பவம் பொதுமக்களை கவர்ந்துள்ளது. அவர் தேநீர் கலந்துகொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் உள்ள திகா பகுதியில் பாதுகாப்பு வாகனங்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது மம்தா பானர்ஜி திடீரென வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார். இதையடுத்து வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய மம்தா பானர்ஜி அங்கே சாலையோரம் இருந்த தேநீர் கடைக்கு சென்று தேநீர் கடைக்காரரிடம் தேநீர் போடும் பாத்திரத்தை வாங்கி தேநீர் தயாரித்துள்ளார்.

இதையடுத்து, கடைக்கு வெளியே மேஜையில் அமர்ந்திருந்த அமைச்சர்கல் சுவேண்டு அதிகாரி, சுப்ரதா முகர்ஜி ஆகியோருடன் அமர்ந்து தான் தயாரித்த தேநீரை அனைவருக்கும் தருமாறு கடைக்காரரிடம் கூறியுள்ளார்.

கடைக்காரரும் அவர்களுக்கு தேநீர் எடுத்துதர மம்தா அவர்களுக்கு தேநீர் கொடுத்தார். இந்த சம்பவம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திடீர் வருகையைக் கேள்விபட்டு அருகாமையில் இருந்த மக்கள் கூட்டம் கூடிவிட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:West bengal cm mamata banerjee prepares tea and serves it to locals

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X