மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு நிகழ்ச்சியில் இருந்து தனது ஹரிஷ் சாட்டர்ஜி தெரு இல்லத்திற்கு திரும்பிய நிலையில், வீட்டில் தவறி விழுந்ததாக திரிணாமூல காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: West Bengal CM Mamata Banerjee suffers ‘major’ injury after slipping at her house: TMC
மம்தா மம்தா பானர்ஜி வீட்டில் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக அவரது திரிணாமூல் காங்கிரஸ் (டி.எம்.சி) கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தனது இல்லத்தில் வழுக்கி விழுந்ததில் அவரது நெற்றியில் பெரி காயம் ஏற்பட்டதாக டி.எம்.சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மம்தா பானர்ஜி வியாழக்கிழமை எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கட்சித் தலைவர் ஹரிஷ் சட்டர்ஜியின் தெரு இல்லத்திற்கு ஒரு நிகழ்வில் இருந்து திரும்பியபோது அவர் தவறி விழுந்ததாக டிஎம்சி வட்டாரங்கள் தெரிவித்தன. “அவர் தனது அறைக்குள் நடந்து கொண்டிருந்தபோது அவர் திடீரென்று வழுக்கி கீழே விழுந்தார். அப்போது அவருடைய தலை ஒரு கண்ணாடி ஷோகேஸில் மோதியது. அது அவரது நெற்றியில் ஆழமான வெட்டு காயத்தையும் மற்றும் அதிக இரத்தப்போக்கிற்கும் வழிவகுத்தது” என்று ஒரு மூத்த டி.எம்.சி தலைவர் கூறினார்.
விபத்து நடந்தபோது அவருடைய சகோதரரின் மகன் அபிஷேக் பானர்ஜியும் வீட்டில் இருந்துள்ளார்.
கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷனின் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம், “அவர் (மம்தா பானர்ஜி) வீட்டில் காயம் அடைந்தார், உடனடியாக எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்” என்று கூறினார்.
விபத்து ஏற்படுவதற்கு முன்பு, முன்னாள் அமைச்சர் சுப்ரதா முகர்ஜியின் சிலையை திறப்பதற்காக மம்தா எக்டாலியா எவர்கிரீன் கிளப்பில் உள்ள கரியாஹட் சென்றிருந்தார்.
இந்த ஆண்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெரிய விபத்தில் சிக்குவது இது இரண்டாவது முறை. முன்னதாக, கடந்த ஜனவரி 24-ம் தேதி கிழக்கு பர்த்வானில் தனது சுற்றுப்பயணத்தின் போது கார் விபத்து தவிர்க்கப்பட்டதால் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “பர்த்வானில் நடந்த நிர்வாகக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி கொல்கத்தாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் பானர்ஜி. பர்த்வான் நகருக்கு அருகில், 200 கிமீ வேகத்தில் கார் வந்ததாக அவர் கூறியதை அவரது கான்வாய் எதிர்கொண்டது. பானர்ஜியின் ஓட்டுநர் பிரேக்கைப் பயன்படுத்தினார். ஆனால், அவரது தலை டாஷ்போர்டில் மோதியது, இதனால் வீக்கம் மற்றும் அதிர்ச்சி ஏற்பட்டது” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“