West Bengal Election 2021 : மேற்கு வங்கத்தில் 6ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதி நிலையை எட்ட உள்ள நிலையில் இடதுசாரிகள், காங்கிரஸ், திரிணாமுல் கட்சியினர் பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டோம் என்று அறிவித்திருந்தது. கொரோனா தொற்று அம்மாநிலத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில் 500 நபர்கள் மட்டும் பங்கேற்கும் பிரச்சாரத்தை கூட்டத்தை மட்டுமே நடத்துவோம் என்று பாஜக கூறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கே பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய பெரிய பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகளை நடத்தி வந்த பாஜக மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி பாஜக பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்தியது.
தங்கள் முக்கிய தலைவர்களின் கருத்துகளை வாக்களரிகளிடம் டிஜிட்டல் முறையில் கொண்டு சேர்ப்போம் என்றும், தற்போது கொரோனா தொற்றின் சங்கிலியை உடைக்க வேண்டும் என்பதே முக்கியம் என்றும் கூறி இந்த 500 பேர் அளவிலான பிரச்சாரம் குறித்து பாஜக தெரிவித்த போது கூறியது.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அவருடைய பிரச்சாரங்களை மேற்கு வங்கத்தில் நடத்தவில்லை என்று கூறியதை விமர்சித்த சில மணி நேரங்களில் பாஜகவின் அறிவிப்பு வெளியானது. கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னுடைய கப்பல் மூழ்குவதை மறைக்கும் கேப்டனின் முடிவை ஒத்தது ராகுலின் முடிவு என்று கூறினார்.
பாஜக தலைவர்கள் திங்கள் கிழமை அன்று மேற்கு வங்கத்தில் 12 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தினர். அசன்சோலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, தன்னுடைய பேச்சை கேட்க திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை கண்டு ஆச்சரியம் அடைவதாக கூறினார்.
பாஜகவின் அரசை விமர்சனம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சௌக்தா ராய், இது மிகவும் குறைவானது, மிகவும் தாமதமானது என்று கூறினார். மீதம் இருக்கும் மூன்று கட்ட தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துங்கள் என்று நாங்கள் வெகுநாட்களாக கூறிக் கொண்டு இருக்கின்றோம். நாங்கள் ஏற்கனவே எங்கள் தேர்தல் அட்டவணையை குறைத்துள்ளோம்… இது மிகக் குறைவு, தாமதமானது. கோவிட் 19 ஏற்கனவே உச்சத்தில் உள்ளது, மேலும் பலர் இறந்துவிட்டனர் என்று குறிப்பிட்டார்.
இந்த முடிவை எடுக்க பாஜக இவ்வளவு நேரம் எடுத்துள்ளது என்றும் இடதுசாரிகள் விமர்சித்தனர். "நாங்கள் மாநிலத்தில் பெரிய தேர்தல் பேரணிகளை நடத்த மாட்டோம் என்று அறிவித்த முதல் கட்சி நாங்கள். இன்று பாஜகவும் அவ்வாறே செய்துள்ளது. இது மக்களிடமிருந்து அனுதாபத்தைப் பெறுவதற்கான முயற்சி தவிர வேறில்லை ”என்று சிபிஎம் மூத்த தலைவர் முகமது சலீம் கூறினார்.
“பெரிய பேரணிகளை நடத்துவது இப்போது ஆபத்தானது என்று கட்சி உணர்கிறது. இது அரசியலை விட மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது” என்று பாஜகவின் முடிவை ஆதரிக்கும் வகையில் சமிக் பட்டாச்சார்யா பேசியுள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை பேசிய மமதா பானர்ஜி எதிர்வரும் அடுத்த கட்ட தேர்தல்களில் மிக குறைந்த நேரம் மட்டுமே பேசுவோம் என்றும், கொல்கத்தாவில் சிறிய அளவில் பிரச்சாரங்கள் நடைபெறும் என்றும் கூறினார். எப்போதும் ஒரு மணி நேரம் நடைபெறும் பிரச்சாரம் தற்போது 20 நிமிடங்களுக்கு மேல் இருக்காது. எனவே மக்கள் அதிக நேரம் அங்கே இருக்க வேண்டிய தேவை ஏற்படாது என்று அவர் கூறினார்.
திங்களன்று அறிவிப்பில், பாஜக தனது பொதுக் கூட்டங்கள் கோவிட் -19 வழிகாட்டுதல்களுடன் திறந்த இடங்களில் நடத்தப்படும் என்று கூறியதுடன், வங்காளத்தில் நடைபெற்று வரும் “அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக செயல்முறை” நிறைவடைவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
தனது பத்திரிகையாளர் சந்திப்பில், பிரசாத், தேர்தல்கள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு கடமையாகும். தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களையும் நாங்கள் பின்பற்றுவோம். பீகாரிலும், கோவிட் மத்தியில் தேர்தல்கள் நடத்தப்பட்டன என்று கூறினார்.
மேற்கு வங்கத்தில் 6 கோடி முகக்கவசங்கள் மற்றும் சானிட்டைஸர்களை வழங்குவோம் என்று பாஜக கூறியுள்ளது. மேலும் மோடியின் ஆட்சியில் இதற்கு முன்பு சந்தித்த சவால்களை எப்படி வெற்றி கொண்டோமோ அதே போன்று கொரோனாவையும் வெற்றி கொள்வோம் என்றும் கூறீயது.
திங்கள் கிழமை பல்வேறு பிரசாரங்களில் பேசிய பானர்ஜீ, மீதம் உள்ள மூன்று கட்ட தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ஆர். கைகளை கட்டிய நிலையில் நான் தேர்தல்களை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார். ஒரு நாளில் இல்லை என்றாலும் இரண்டு நாட்களுக்குள் முடிக்கும் படி மாற்றுங்கள். உங்களின் முடிவுகளை பாஜகவின் பரிந்துரைகளுடன் மேற்கொள்ளாதீர்கள். மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கின்றீர்கள் என்பதை உறுதி செய்யுங்கள் என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் உட்பட அனைவரையும் வாக்களிக்க வேண்டும் என்று மமதா கேட்டுக் கொண்டார். 6 மணிக்கு பிறகு நீங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று உங்களின் வாக்குகளை பதிவு செய்யுங்கள் இல்லையென்றால் பாஜக உங்களின் பெயரை சி.ஏ.ஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்கிவிடும் என்று கூறினார்.
இறுதி மூன்று கட்ட தேர்தல்களையும் ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் அறிவுறுத்தியது. மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் எது முக்கியம் என்பதை ஆணையமே உறுதி செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கையா அல்லது அவர்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்வதா? தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் அது ரம்ஜான் முடிவடைந்த பிறகு, இரண்டாம் அலை நீர்த்து போன பிறகு நடைபெற வேண்டும் என்று அவர் கூறினார். அடுத்த மூன்று கட்ட தேர்தல்கள் முறையே ஏப்ரல் 22, 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும்.
தற்போது மேற்கு வங்கத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 6 லட்சம். தொற்று நாள் தோறும் அதிகரித்து வருகின்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று 28 பேர்கள் உயிரிழக்க மொத்த உயிரிழப்பு 10,568 ஆனது.
மேலும் படிக்க : கொரோனா இரண்டாம் அலை: ஆக்ஸிஜன் தேவை அதிகம்; இறப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.