West Bengal elections 2021 : இடது காலில் ப்ளாஸ்டரும் படுத்திருக்கும் மமதாவிற்கு பயங்கரமான கால்வலி ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். நந்திகிராமில் கீழே விழுந்த பிறகு அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வருமான மமதா பானர்ஜி வியாழக்கிழமை அன்று, ”விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவதாகவும், மார்ச் 27ம் தேதி துவங்கும் பிரச்சாரத்தில் வீல்சேரில் அமர்ந்தவண்ணமே பங்கேற்பேன் என்று கூறியுள்ளார்.
எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மமதா, கட்சி தொண்டர்கள் அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றூம் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளார். மெந்திப்பூர் மாவட்ட அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். தேர்தல் ஆணையம் இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அதே நாளில் மமதா மேற்கூறியவாறு தொண்டர்களிடம் கோரிக்கை வைத்தார்.
புதன் கிழமை அன்று, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர், கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் நான்கு ஐந்து நபர்கள் கும்பலாக வந்து தன்னை தள்ளிவிட்டதாக கூறியுள்ளார் மமதா. தன்னுடைய மற்ற திட்டங்களை உடனே நிறுத்திவிட்டு, கொல்கத்தா திரும்பிய அவர் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை சதித்திட்டம் என்று டி.எம்.சி. கட்சி கூற, பரிதாப அலையை ஏற்படுத்தி அதில் நன்மை அடைய விரும்புகிறார் மமதா என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக டி.ஜி.பி. நிரஜ் நாயன் பாண்டே இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, மாவட்ட அதிகாரிகள் மற்றும் மேற்கு மண்டல ஏ.டி.ஜி. இது குறித்து அறிக்கை தருவார்கள். அந்த அறிக்கைக்கு பிறகே இது தொடர்பாக நாங்கள் எதுவும் கருத்து கூற முடியும் என்று கூறினார். மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
கிழக்கு மெதினிப்பூர் டி.எம். விபு கோயல், என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. நாங்கள் சில சாட்சியங்களிடம் பேசினோம். தெளிவான வீடியோ காட்சிகளும் இல்லை. மக்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர் என்றார்.
பானர்ஜியின் வீடியோவில், தன்னுடைய கால் தசையில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும் அனைத்து மக்களும் அமைதியாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு அளிக்க வேண்டாம். நான் விரைவில் குணமடைவேன் என்று நம்புகின்றேன் என்று அவர் கூறினார்.
எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில், 6 மருத்துவர்கள் அடங்கிய குழு மமதாவின் நிலை குறித்து பரிசோதனை மேற்கொண்டனர். அவர் நிலையாக உள்ளார். அவர் உடலில் சோடியம் அளவு சற்று குறைவாக உள்ளது. அவருடைய இடது கால் எலும்பில் அடிபட்டுள்ளது. வலியுடன் இருக்கிறார். ரேடியோ துறை சோதனை முடிவுகளுக்கு பிறகு மருத்துவ குழு அவரின் நிலை குறித்து அறிவிக்கும் என்று மணிமோய் பண்டோபாத்யா கூறினார்.
பாஜக தலைவர்கள், திரிபுரா மற்றும் மேகலாயா ஆளுநர் டதகட்டா ராய், மேற்கு வங்க பாஜக செய்தி தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா ஆகியோர் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். இருப்பினும் அவர்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
மருத்துவரின் ஆலோசனைப்படி நாங்கள் அவரை பார்க்க சென்றோம். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் எஸ்.எஸ்.கே.எம். இயக்குநர் மற்றும் டி.எம்.சி தலைவர் அருப் பிஸ்வாஸ் ஆகியோரை சந்தித்துவிட்டு திரும்பினோம். அவர் விரைந்து குணமடைய விரும்புகிறோம் என்று டதகட்டா ராய் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.