மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் நியூ ஜல்பைகுரி அருகே இன்று திங்கள்கிழமை காலை சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நியூ ஜல்பைகுரி அருகேயுள்ள ரங்கபானி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது
நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து சீல்டா செல்லும் வழியில் ரயில் சிலிகுரியைக் கடந்த பிறகு ரங்கபாணி நிலையம் அருகே மோதல் ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பின்புற பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. இந்த ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Kanchanjunga Express Train Accident Live Updates
ரங்கபானி மற்றும் நிஜ்பரி நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மேற் குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
— Indian Express Tamil (@IeTamil) June 17, 2024
ஆங்கிலத்தில் படிக்கவும்: Kanchanjungha Express collides with goods train near Bengal’s New Jalpaiguri, rescue ops on
மம்தா நடவடிக்கை
இந்த தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் வலைதள பதிவில், "டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஃபன்சிடேவா பகுதியில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விவரங்கள் காத்திருக்கும் நிலையில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. மீட்பு, மீட்பு மற்றும் மருத்துவ உதவிக்காக டி.எம், எஸ்.பி, மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது." என்று பதிவிட்டுள்ளார்.
Shocked to learn, just now, about a tragic train accident, in Phansidewa area of Darjeeling district. While details are awaited, Kanchenjunga Express has reportedly been hit by a goods train. DM, SP, doctors, ambulances and disaster teams have been rushed to the site for rescue,…
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2024
sad news...more details are awaited... pic.twitter.com/bNq4E6fztK
— Manraj Meena (@ManrajM7) June 17, 2024
ரயில்வே அமைச்சர் பதிவு
நியூ ஜல்பைகுரி ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் தனது எக்ஸ் வலைதள பதிவில், “எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடக்கின்றன. ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.