Advertisment

'கட்டமைக்கப்பட்ட கதை': பெண் ஊழியர் பாலியல் புகார் குறித்து மேற்கு வங்க கவர்னர் விளக்கம்

மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்த நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் கவர்னர்.

author-image
WebDesk
New Update
West Bengal Governor CV Ananda Bose on accused of sexual harassment Tamil News

மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்; 'கட்டமைக்கப்பட்ட கதை' என விளக்கம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

West Bengal Governor CV Ananda Bose: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும், அம்மாநில கவர்னர் சி.வி ஆனந்த போஸுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆனந்த போஸ் கடந்த நவம்பர் 23, 2022 முதல் மேற்கு வங்க கவர்னராக பணியாற்றி வரும் நிலையில், ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், கவர்னர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: West Bengal Governor CV Ananda Bose accused of sexual harassment, he says ‘engineered narrative’

இது தொடர்பாக, அந்தப் பெண்  ஊழியர்  ராஜ்பவன் ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அவர் கவர்னரை ஏப்ரல் 24 ஆம் தேதி மற்றும் நேற்று வியாழக்கிழமை என இரண்டு முறை சந்தித்தாக தெரிவித்துள்ளார். மேலும், தான் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிமாக ராஜ் பவனில் பணிபுரிந்து வருவதாகவும், ஊழியர் குடியிருப்பில் தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

“19.4.24 அன்று, கவர்னர் சார் என்னிடம் சிறிது நேரம் ஒதுக்கி, எனது சி.வி-யுடன் அவரைச் சந்திக்கும்படி கூறினார். 24.04.2024 அன்று, மதியம் 12.45 மணியளவில், அவர் என்னை தனது அலுவலக அறைக்கு அழைத்தார், சிறிது விவாதத்திற்குப் பிறகு, என்னைத் தொட்டார். எப்படியோ சமாளித்து அலுவலக அறையை விட்டு வெளியேறினேன். இன்று 02.05.2024 அன்று மீண்டும் ஒருமுறை என்னை அழைத்தார். நான் பயந்து போனதால் என் மேற்பார்வையாளரையும் கூட்ட அறைக்கு அழைத்துச் சென்றேன். சிறிது நேரம் வேலையைப் பற்றிப் பேசிவிட்டு சூப்பர்வைசரைப் போகச் சொன்னார். எனது பதவி உயர்வு பற்றி பேசி உரையாடலை நீட்டினார். இரவு எனக்கு போன் செய்வேன் என்று சொல்லி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். நான் மறுத்ததால், அவர் என்னைத் தொட முயன்றார். நான் எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறினேன்." என்று தனது புகாரில் பெண் ஊழியர் கூறியுள்ளார். 

அந்த பெண், ஒரு சக ஊழியரின் உதவியுடன், "இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்களை (மக்களிடமிருந்து) தடுக்கிறார்" என்றும், அவர் "அதற்காகக் கண்டிக்கப்பட்டார்" என்றும், அதனால், கவர்னர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்றும் ராஜ்பவனில் உள்ளவர்கள் பெண் ஊழியர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்கள். 

இந்தப் புகாரை உறுதி செய்த மத்திய பிரிவு துணை கமிஷனர் இந்திரா முகர்ஜி பேசுகையில், "மாலை 5 மணியளவில், போலீஸ் அவுட்போஸ்ட்டில் புகார் அளிக்கப்பட்டது. இது ஹேர் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இது கவர்னருக்கு எதிரான புகார். அதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது." என்று கூறினார். 

அரசியலமைப்பின் 361 வது பிரிவின் கீழ் ஆளுநருக்கு உள்ள விலக்கு பற்றி கேட்டதற்கு, மத்திய பிரிவு துணை கமிஷனர் இந்திரா முகர்ஜி, “ஒரு பெண் புகார் அளித்தார், நாங்கள் விசாரணை நடத்த கடமைப்பட்டுள்ளோம். இது ஒரு முக்கியமான புகார். எங்கள் சட்டத்துறை மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களுடன் பேசுவோம். என்னால் விவரங்களை வெளியிட முடியாது, ஆனால் புகாரின்படி, ராஜ் பவனில் நடந்த சம்பவங்கள் - ஒன்றுக்கு மேற்பட்ட முறையா என்பது குறித்து அந்தப் பெண்ணிடமும் பேசிவிட்டோம்” என்று கூறினார். 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க கவர்னர் மாளிகை, சி.வி.ஆனந்த போஸ் கூறியதாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "உண்மை வெல்லும். கட்டமைக்கப்பட்ட கதைகளால் நான் பயப்படுவதை மறுக்கிறேன். யாரேனும் என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால், கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். ஆனால், மேற்கு வங்காளத்தில் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை அவர்களால் தடுக்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​“என்னை இழிவுபடுத்துவதன் மூலம் யாராவது சில தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால், கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பார். ஆனால், வங்காளத்தில் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை அவர்களால் நிறுத்த முடியாது." என்றும் கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment