மேற்கு வங்க ஆசிரியர் தேர்வு வாரிய முறைகேடு; மம்தா அரசின் மூத்த அமைச்சர் கைது

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய ஊழல் புகார்; மம்தாவின் முக்கிய தளபதிகளும் ஒருவரும், மூத்த அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி கைது

மேற்கு வங்க ஆசிரியர் தேர்வு வாரிய முறைகேடு; மம்தா அரசின் மூத்த அமைச்சர் கைது

Santanu Chowdhury

Mamata close aide Partha Chatterjee, Bengal minister who is in eye of SSC scam storm: மேற்கு வங்க மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பார்த்தா சாட்டர்ஜி, மாநில பள்ளிப் பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயல்முறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பார்த்தா சாட்டர்ஜி முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவர் ஆவார்.

பல்வேறு முக்கிய இலாகாக்களைக் கையாளும் ஒரு முக்கிய (ஹெவிவெயிட்) அமைச்சராக இருப்பதைத் தவிர, பார்த்தா சாட்டர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகனும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் பதவிக்குப் பிறகு மிக முக்கியமான கட்சிப் பதவி இது.

இதையும் படியுங்கள்: டெல்லி துணைநிலை ஆளுனர் விவகாரம்; மத்திய அரசை தாக்கும் ஆம் ஆத்மி

கொல்கத்தாவின் மிக முக்கியமான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவரும், கொல்கத்தாவின் பெஹாலா பாஸ்கிம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கபட்டவருமான 69 வயதான பார்த்தா சாட்டர்ஜி, மேற்கு வங்க கட்சி ரீதியிலான விவகாரங்களைக் கையாளும் போது மம்தாவின் “நம்பிக்கைக்குரிய” தலைவராக இருந்து வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் மாவட்டக் குழுக்களின் அரசியலமைப்பு முதல் தேர்தல் உத்திகளை உருவாக்குவது வரை, ஒட்டுமொத்த கட்சி நிறுவன விஷயங்களில் பார்த்தா சாட்டர்ஜி முக்கிய பங்கு வகிக்கிறார். கட்சியின் ஒழுக்காற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

பார்த்தா சாட்டர்ஜி பல தசாப்தங்களுக்கு முன்பு அரசியலில் நுழைவதற்கு முன்பு ஆண்ட்ரூ யூல் நிறுவனத்தில் மனிதவள நிபுணராக பணியாற்றினார். மம்தா பானர்ஜி காங்கிரஸில் இருந்து விலகி 1998 இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய பிறகு, பார்த்தா சாட்டர்ஜி கட்சியில் சேர்ந்தார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அவர் 2001 இல் பெஹாலா பாஸ்சிமில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதன்பிறகு தொடர்ந்து அந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்று வருகிறார். 2006 முதல் 2011 வரை சி.பி.எம் தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்க சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பார்த்தா சாட்டர்ஜி இருந்தார்.

2011 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை திரிணாமுல் காங்கிரஸ் அகற்றி அதன் அரசாங்கத்தை அமைத்தபோது, ​​தேர்தலில் 59,021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பார்த்தா சாட்டர்ஜி, மம்தா அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பார்த்தா சாட்டர்ஜி வர்த்தகம் மற்றும் தொழில், பொது நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் ஆகிய துறைகளுக்கு மம்தாவால் அமைச்சராக்கப்பட்டார். பின்னர் அவர் சட்டசபையின் துணைத் தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்டார்.

2014 இல், பார்த்தா சாட்டர்ஜி உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்விக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  தற்போதைய SSC ஊழலின் மையத்தில் உள்ள இந்த இலாகாக்களை 2021 வரை அவர் வைத்திருந்தார். 2021ல் அவருக்குப் பதிலாக மற்றொரு அமைச்சர் பிரத்யா பாசு உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்விக்கான நியமிக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று, மம்தா தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, அவர் மீண்டும் வணிகம் மற்றும் தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைகளை பார்த்தா சாட்டர்ஜிக்கு ஒதுக்கினார்.

பார்த்தா சாட்டர்ஜி மாநிலக் கல்வி அமைச்சராக இருந்தபோதுதான் மாநில பள்ளிப் பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் தொடக்கக் கல்வி வாரியத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது. தகுதிப் பட்டியலில் இடம் பெறுபவர்களுக்குப் பதிலாக, குறைந்த மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பணப் பலன்களுக்கு ஈடாக வேலை கிடைப்பதை உறுதி செய்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை பார்த்தா சாட்டர்ஜி எதிர்கொள்கிறார்.

SSC ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மே 18 அன்று பார்த்தா சட்டர்ஜி, அரசுப் பள்ளிகளில் முறைகேடாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக மத்திய ஏஜென்சியான சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜரானார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: West bengal minister partha chatterjee ssc scam

Exit mobile version