Advertisment

9 பேரை காவு வாங்கிய உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: பதபதைக்கும் மேற்கு வங்க அரசியல் கொலைகள்

மேற்கு வங்கத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக வன்முறைகள் நடந்து வருகின்றன இந்த அரசியல் வன்முறையால் தற்போதுவரை 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
West Bengal panchayat poll: 9 dead after announcement Tamil News

மேற்கு வங்கத்தில் இறந்த 9 நபர்களில் 5 பேர் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) கட்சியினர், இருவர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் மற்றும் தலா ஒருவர் சி.பி.எம், ஐ.எஸ்.எஃப் மற்றும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள்.

West Bengal panchayat poll Tamil News: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முன்னாள் தலைமைச் செயலாளரான ராஜீவ் சின்ஹா கடந்த ஜூன் 7-ம் தேதி மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற அடுத்த நாளே அதாவது ஜூன் 7-ம் தேதி அன்று மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 8-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

Advertisment

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக வன்முறைகள் நடந்து வருகின்றன இந்த அரசியல் வன்முறையால் தற்போதுவரை 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 5 பேர் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) கட்சியினர், இருவர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் மற்றும் தலா ஒருவர் சி.பி.எம், ஐ.எஸ்.எஃப் மற்றும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள். தற்போது இறந்தவர்கள் விவரம் குறித்து இங்கு சுருக்கமாகக் காணலாம்.

பூல்சந்த் ஷேக் (32), முர்ஷிதாபாத் (காங்கிரஸ்)

வேட்புமனு தாக்கலின் முதல் நாளான ஜூன் 9 அன்று ஷேக் கொல்லப்பட்டார். காங்கிரஸின் தீவிர ஆதரவாளரான அவர் கேரளாவில் பணிபுரிந்து நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் உள்ள தனது கிராமத்திற்கு வந்துள்ளார். இந்தக் கொலையில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்த போலீஸார், பழைய நிலத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததாகக் கூறினர். இதற்கிடையில் அவரது கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரசார் மறுத்தனர்.

மன்சூர் ஆலம் (23), வடக்கு தினாஜ்பூர் - இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்)

ஜூன் 15ஆம் தேதி உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோப்ரா பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளில் நடந்த மோதலின் போது ஆலம் சுடப்பட்டார். அவர் இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்புடன் தொடர்புடையவர் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொகிதீன் மொல்லா (24), பங்கர் - இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி (ஐ.எஸ்.எஃப் )

ஜூன் 15 அன்று ஐ.எஸ்.எஃப் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே நடந்ததாகக் கூறப்படும் மோதலில் மொல்லா இறந்தார். காவல்துறை கொலை வழக்கைப் பதிவு செய்து எஃப்.ஐ.ஆரில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அரபுல் இஸ்லாம் மற்றும் அவரது மகன் ஹகிமுல் இஸ்லாம் உட்பட 20 பேரின் பெயரை சேர்த்தது. ரஷித் மொல்லா (அவரது 40களில்), பங்கர் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருபர்.

மேலும், உள்ளூர் எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமானவராக அவர் கருதப்பட்டு வரும் நிலையில், அதன் காரணமாக தான் ஜூன் 15 அன்று ஐ.எஸ்.எஃப் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மோதல் நடந்தாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு ஐ.எஸ்.எஃப் மற்றும் 2 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உட்பட மூன்று கொலை வழக்கு உட்பட பங்கரில் அமைதியின்மை தொடர்பாக 7 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். மொல்லாவின் கொலை வழக்கில் சில ஐ.எஸ்.எஃப் கட்சியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜு நாஸ்கர் (40) பங்கர் - திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டி.எம்.சி) ஆதரவாளர்

ஜூன் 15 அன்று இதே மோதலின் போது அவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஐ.எஸ்.எஃப் எம்.எல்.ஏ நௌஷாத் சித்திக் மற்றும் 68 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முஸ்தபா ஷேக் (62), மால்டா தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டி.எம்.சி) வேட்பாளர்

முஸ்தபா ஷேக் ஜூன் 18ஆம் தேதி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். ஷேக் ஒரு முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்தவர். மற்றும் சுஜாபூரில் ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தலில் போட்டியிட்டார். அதே கட்சியை சேர்ந்த வேறு சிலரும் சீட்டுக்காக போட்டியிட்டு கொலை செய்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முஹம்மது ஹக் (42), முர்ஷிதாபாத் - திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி

முஹம்மது ஹக் 14 பஞ்சாயத்து வேட்பாளர்களை மேற்பார்வையிட்டார் மற்றும் ஜூன் 16 அன்று கொல்லப்பட்டார். காங்கிரஸின் பிளாக் கமிட்டி உறுப்பினர் பஜ்ரே ஆலம் ஷேக் இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பு தாஸ் (28), கூச் பெஹார் (பா.ஜ.க தொண்டர்)

தாஸ், பாஜகவின் பஞ்சாயத்து தேர்தல் வேட்பாளர் பிஷாகா தாஸின் மைத்துனர் மற்றும் வேட்புமனுத் தாக்கலின் போது முன்மொழிந்தவர். ஜூன் 17 அன்று அவர் வீட்டை விட்டு வெளியே வந்தபோது ஆயுதம் ஏந்திய நபர்களால் தாக்கப்பட்டதாக தாஸின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பிஷாகாவின் வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தனஞ்சோய் சௌபே (46), புருலியா திரிணாமுல் காங்கிரஸ் செயல்பாட்டாளர்

அட்ரா நகரத் தலைவர் சௌபே ஜூன் 22 அன்று கொல்லப்பட்டார். அவர் கட்சி அலுவலகத்திற்குள் இருந்தபோது சிலர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் அவரது பாதுகாவலர் தன்மய் பால் காயமடைந்தார். உள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment