Advertisment

மம்தா அரசு vs மேற்கு வங்க ஆளுனர்: சுமூக உறவு வலுப் பெற்றது எப்படி?

ராஜ் பவன் ஒரு மோதல் இல்லாத பகுதியாக மாற வேண்டும், என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸின் தி ஐடியா எக்ஸ்சேஞ்ச் நிகழ்ச்சியில் போஸ் கூறினார்.

author-image
WebDesk
New Update
bengal

West Bengal Governor CV Ananda Bose with Chief Minister Mamata Banerjee. (Express photo by Partha Paul/File)

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தனது அலுவலகத்திற்கும் மேற்கு வங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் இடையிலான மேம்பட்ட உறவுகள், கூட்டுறவு கூட்டாட்சியின் பரிணாம செயல்முறையின் ஒரு பகுதி என்று கூறினார், மேலும் ராஜ் பவன் ஒரு மோதல் இல்லாத பகுதியாக மாற வேண்டும், என்று வலியுறுத்தினார்.

Advertisment

ராஜ்பவனுக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஆண்டு நவம்பரில் பொறுப்பேற்ற போஸ், ஆளுநராக சமரசம் மற்றும் ஒத்துழைப்பின் வழியைப் பின்பற்றுவேன் என்று கூறினார்.

என் கருத்துப்படி, மோதலுக்குப் பதிலாக சமரசம் இருக்க வேண்டும். பேரார்வம், கருணையுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் நடுநிலை பாதையே சமுதாயத்திற்கு நல்லது என்று தோன்றுகிறது. ராஜ் பவன் ஒரு மோதல் இல்லாத பகுதியாக மாற வேண்டும், என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸின் தி ஐடியா எக்ஸ்சேஞ்ச் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை போஸ் கூறினார்.

போஸூக்கு முன் ஆளுனராக இருந்த தற்போதைய இந்தியத் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கரின் ஆட்சிக் காலத்தில் ராஜ்பவனுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் சிதைந்தன. மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளை நீண்ட காலமாக அடிக்கடி பகிரங்கமாக விமர்சித்ததன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி போஸ் பொறுப்பேற்ற பிறகு உறவுகள் மேம்பட்டதாகத் தோன்றியது, ஆளுனரை "சரியான மனிதர்" என்று கூறியதால், முதல்வர் மம்தா பானர்ஜி நல்லுறவை பொதுவில் ஒப்புக்கொண்டார்.

பெங்காலி மொழியைக் கற்க போஸின் முயற்சிகள் மாநிலத்திலும் நன்கு பாராட்டப்பட்டது. குடியரசு தினத்தன்று, ஆளுநர் ராஜ்பவனில், ஒரு குழந்தையின் கல்வியின் முறையான தொடக்கத்தைக் குறிக்கும் “ஹாதே கோரி (எழுதத் தொடங்குதல்)” விழாவை ஏற்பாடு செய்தார்.

நடுநிலைப் பாதையில் நடக்க வேண்டும் என்ற தனது கருத்து, மாநிலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக ஆளுநர் கூறினார். இந்த கருத்தை மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள், ஊடகங்கள், சாமானியர்கள் மற்றும் நீதித்துறை உட்பட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மாநில அரசாங்கத்துடனான மோதலை எப்படி சுமூகமான உறவுகளாக மாற்ற முடிந்தது என்ற கேள்விக்கு போஸ், “நாட்டில் கூட்டுறவுக் கூட்டாட்சிக் கொள்கையில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சிக்கு நான் ஒரு ஊமைச் சாட்சியாக மட்டுமே இருந்தேன். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண நேர்மையான முயற்சி இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, இரண்டு வகையான மக்கள் உள்ளனர் - ஒருவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பவர் மற்றும் மற்றவர்கள் ஒவ்வொரு தீர்விலும் சிக்கல்களைக் கண்டுபிடிப்பார்கள். மேற்கு வங்க ஆளுநராக எனது வரம்புக்குள் சமரசம் மற்றும் ஒத்துழைப்பின் பாதையை நிச்சயமாகப் பின்பற்ற விரும்புகிறேன், என்றார்.

மேலும் முதல்வர் குறித்த கேள்விக்கு பதிலளித்த போஸ், முதல்வர் மம்தா பானர்ஜி எனது மரியாதைக்குரிய அரசியலமைப்பு சகா. மாநிலத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் மாநிலத்தில் இயல்புநிலை மற்றும் நல்லிணக்க செயல்முறைக்கு ஒத்துழைத்து வருகின்றனர் என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment