மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். அவர் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பல மாதங்களாக ஆளும் கட்சியிலிருந்து இடைவெளியை பின்பற்றி வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, போக்குவரத்து அமைச்சர் பதவியை வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஃபேக்ஸ் மூலம் அனுப்பினார். மேலும், ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும் அனுப்பினார்.
நான் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதை இதன்மூலம் தெரிவிக்கிறேன். இதை உடனடியாக ஏற்றுக்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவருடைய முடிவில் தேவையான நடவடிக்கை எடுக்க இந்த ராஜினாமா கடிதத்தை ஒரே நேரத்தில் மேற்கு வங்க ஆளுநருக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறேன். மாநில மக்களுக்கு சேவை செய்வதற்கு எனக்கு அளித்த வாய்ப்பளி அளித்தமைக்கு நன்றி. நான், பொறுப்புவகித்தவற்றில் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றினேன்.” என்ரு சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கரும் இதனை உறுதிசெய்து ட்வீட் செய்துள்ளார். “இன்று மதியம் 1:05 மணியளவில் அமைச்சர் பதவியில் இருந்து சுவேந்து அதிகாரியின் ராஜினாமா கடிதம் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளார். இந்த பிரச்சினை அரசியலமைப்பு கண்ணோட்டத்தில் தீர்க்கப்படும்.” என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சுவேந்துவின் நெருங்கிய உதவியாளர்களின் கருத்துப்படி, அவர் பாஜகவின் மத்திய தலைமையுடன் தொடர்பு கொண்டுள்ளார். விரைவில் பாஜகவின் உயர்மட்ட தலைவர்களின் முன்னிலையில் காவி கட்சியில் சேரலாம்.
சமீப வாரங்களில், நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளத் துறைகளையும் நடத்திய சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து, திரிணாமுல் காங்கிரஸ் அல்லாத பதாகைகளின் கீழ் அரசியல் பேரணிகளில் உரையாற்றினார். அதிகாரிக்கு ஆதரவாக தாதர் அனுகாமி (சகோதரரின் பின்தொடர்பவர்கள்) என்ற அமைப்பும் வெவ்வேறு இடங்களில் வந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நந்திகிராம் திபாஸ் பேரணிகளின் போது இந்த பிரச்னை பெரியதானது. இதில் இரு தரப்பினரும் இரண்டு தனித்தனி பேரணிகளில் கடுமையான உரைகளை நிகழ்த்தினர். எதிர் பேரணியில், அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், சுவேந்து என்று பெயரிடாமல், அவரை துரோகி என்று குறிப்பிட்டார். கட்சித் தலைவர்களுக்கும் சவேந்து சவால் விடுத்து, அவர்கள் தேர்தலுக்கு முன்பு நந்திகிராமிற்கு வருகிறார்கள். தேர்தலுக்குப் பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?… கடந்த 13 ஆண்டுகளில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?… ஊரறிந்த பாப்பானுக்கு பூனூல் அடையாளம் தேவையில்லை” என்று கூறினார்.
இந்த பிரச்னையின் சூட்டைத் தனிக்கும் முயற்சியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் மற்றும் மூத்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் ஆகியோர் சுவேந்து அதிகாரியின் வீட்டிற்குச் சென்றனர். ஆனால், அவர்கள் பிரச்னையைத் தீர்ப்பதில் தோல்வியடைந்தனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”