வெஸ்ட் பெங்கால் அல்லது பங்களா - எந்த பெயரை வைக்கலாம் என்பதில் நீடிக்கும் குழப்பம்

உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மேற்கு வங்க மாநிலம்

மேற்கு வங்கம் மாநிலத்தில் மம்தா பானர்ஜீ தலைமையில் திரிணாமூல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் பெயரை மாற்றுவது தொடர்பாக மிக அதிக நாட்கள் சட்டமன்றத்தில் அமளிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2016ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தின் பெயரினை மாற்றுவது தொடர்பாக ஒரு தீர்மானம் சட்டசபையில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியால் கொண்டு வரப்பட்டது.

அதன்படி மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ஆங்கிலத்தில் பெங்காள் என்றும், வங்க மொழியில் பங்களா என்றும், இந்தி மொழியில் பங்காள் என்றும் மாற்ற விரும்பி அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க 

இந்த பெயர் மாற்ற தீர்மானத்தினை அன்று சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

மத்திய அரசின் கருத்திற்காக மூன்று பெயர்களையும் அனுப்பியிருந்தது மாநில அரசு. ஆனால் மீண்டும் மூன்று மொழியிலும் பங்களா என்றே ஒரே பெயரினையே வைக்க விரும்பி தீர்மானத்தில் மாற்றம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அந்த தீர்மானத்திய சட்ட சபையில் கொண்டு வந்தது.

இந்த பெயர்மாற்றத்திற்கு ஒருமனதாக அனைவரும் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இப்பெயருக்கு ஒப்புதல் அளித்த பின்பு அலுவல் ரீதியாக பெயர் மாற்றம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close