மேற்குவங்கம் மற்றும் உத்தரக்காண்ட் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் உத்தரக்காண்ட்டில் ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கரீம்பூர், காரக்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.க்களாக ஆனதால் இந்த தொகுதிகள் காலியானது. அதே போல, அம்மாநிலத்தில் உள்ள கலியகஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பர்மாநாத் ராய் காலமானதால் இந்த தொகுதியும் காலியானது.
தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?
உத்தரக்காண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகார் தொகுதியில் மூன்றுமுறை வெற்றிபெற்று அமைச்சராக இருந்த பிரகாஷ் பண்ட் காலமானதைத் தொடர்ந்து பித்தோராகார் தொகுதி காலியானது.
மேற்கு வங்கத்தில் காலியான கரீம்பூர், காரக்பூர், கலியகஞ்ச் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் உத்தரக்காண்ட்டின் பித்தோராகார் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இந்த வாரம் திங்கள் கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
உத்தரக்காண்ட்டின் பித்தோராககார் தொகுதியில் காலமான அமைச்சர் பிரகாஷ் பண்ட் மனைவி சந்திரா பண்ட்டை போட்டியிட செய்தது. அனுதாப அலையில் வெற்றிபெறுவார் என பாஜக எதிர்பார்த்தது. காங்கிரஸ் கட்சி சார்பில், அஞ்சு லுந்தி போட்டியிட்டார்.
மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில், கரிம்பூர், காரக்பூர், கலியகஞ்ச் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். ஆனால், உத்தரக்காண்ட், பித்தோராகார் தொகுதியில் மட்டும் பாஜக 3267 வாக்குகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
இந்த இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வங்காளம் கலாச்சார தலைநகரத்தையும் மகாராஷ்டிரா இந்தியாவின் நிதி மூலதன தலைநகரத்தையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். உண்மை என்னவென்றால், ஒரு பெரிய மக்களவைத் தொகுதி வெற்றிக்குப் பின்னர் 5-6 மாதங்களுக்குள், இரு மாநிலங்களிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. பாஜக என்னுடைய வழி நெடுஞ்சாலை வழி என்று நினைக்கிறது. ஜனநாயகத்தில் எங்களைப் போன்றவர்கள் தேசிய நெடுஞ்சாலையும் மாநில நெடுஞ்சாலையும் இருக்கிறது என்கிறோம். நாம் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். ஆனால், யாராவது ஒருவர் அவர்கள் தனி நெடுஞ்சாலை வழி என்று நினைத்தால், நாங்கள் வழியே கிடையாது என்போம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.