மேற்கு ரயில்வே (WR) ஏப்ரல் 5 முதல் சோதனை அடிப்படையில் 11 கூடுதல் 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி., அல்லாத உள்ளூர் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
இதனை மேற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்தத் தினசரி உள்ளூர் ரயில் சேவைகளின் மொத்த எண்ணிக்கை 1,394 ஆக உயரும். மேலும், இந்தச் சேவைகள் ஏப்.5ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன.
இருப்பினும், அறிமுகப்படுத்தப்படும் சில சேவைகள் போரிவலி மற்றும் பாந்த்ரா நிலையங்களில் நிறுத்தப்படும். தற்போதுள்ள சில சேவைகளின் நேரங்களிலும் சிறிய மாற்றங்கள் இருக்கும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
தினசரி அடிப்படையில் 27.24 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் WR இன் கீழ் உள்ளூர் ரயில் நெட்வொர்க்கைப் பயன்படுத்துகின்றனர்.
ஏசி அல்லாத உள்ளூர் ரயில் சேவைகளை வழங்குவதைத் தவிர, டபிள்யூஆர் 79 ஏசி லோக்கல் ரயில் சேவைகளையும் இயக்குகிறது, அவை பயணிகளிடையே பிரபலமடைந்துள்ளன.
ஜனவரி 2023 இல் மட்டும், சுமார் 24.53 லட்சம் பயணிகள் ஏசி ரயில்களில் பயணம் செய்துள்ளனர், ஏப்ரல் 2022 முதல் அத்தகைய பயணிகளின் எண்ணிக்கை 1.79 கோடிக்கும் அதிகமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“