2021-2022 -ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்யை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். சுமார் 1.50 மணி நேரம் நீண்ட உரை ஆற்றி நிறைய அறிவிப்புகளை வெளியிட்டதோடு பல திட்டங்களையும் அறிவித்திருந்தார். அந்த உரையில் இயற்றலும் ஈட்டலும் காத்தலும், காத்த வகுத்தலும் வல்லது அரசு எனும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய அவர், வட்டி வருமானம், ஓய்வூதியம் ஆகியற்றை மட்டும் நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமா வரி தாக்கல் செய்ய தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
வருமான வாரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டு 3.31 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது (2020) 6.48 கோடியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரி தளர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக தொழில் முனையவுள்ள இளைஞர்களுக்கும், மற்றும் புதியதாக தொழில் முனையுள்ள நிறுவனங்களுக்கும் வருமான வரி செலுத்த ஓர் ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
வருமான வரி மதிப்பீட்டு வழக்குகளை மீண்டும் திறப்பதற்கான கால அவகாசத்தை ஆறு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வரி மோசடி, வருமானத்தை மறைப்பது, ரூ .50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அது 10 ஆண்டுகள் வரை ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரூ .50 லட்சம் வரை வரி செலுத்தக்கூடிய வருமானம் கொண்ட சிறு வரி செலுத்துவோருக்கு, ஒரு தீர்வுக் குழு அமைக்கப்பட உள்ளது.
1.10 லட்சம் வரி செலுத்துவோரக்கு வரிப் பகிர்வை தீர்க்க நேரடி வரி 'விவாட் சே விஸ்வாஸ்' திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு முகம் இல்லாத வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (ITAT) தொடங்கவும் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.
"ஜிஎஸ்டி வரியில் தலைகீழ் கட்டமைப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தங்கத்திற்கான வருமான வரி 12.5% லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil