நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டுவர இன்று நாடாளுமன்றத்தில் நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.
இதனை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகஜன் ஏற்றுக் கொண்டார். இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் மீதான வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன?
நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளும் மத்திய அரசிற்கான ஆதரவினை நிரூபிப்பதற்காக நடத்தப்படுவது. ஒரு கட்சி, கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருக்கின்றோம் என்பதனை அவர்கள் நிரூபிக்க வேண்டும். நாடாளுமன்ற மக்களவையில் இருக்கும் யாராவது ஒரு உறுப்பினர், ஆளும் கட்சியின் மீதான பெரும்பான்மை மீது சந்தேகம் எழும் பட்சத்தில், அவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரச் சொல்லி மக்களவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கலாம். ஏன் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்தை அவர் கூற வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. To read this article in English
வாக்கெடுப்பு எப்படி நடைபெறும் ?
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் யார் வேண்டுமென்றாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நடத்தச் சொல்லி கோரிக்கை வைக்கலாம். இது நாடாளுமன்ற மக்களவையில் மட்டுமே நடைபெறும். மேலும் கோரிக்கை வைக்கும் நபர் எழுத்து வடிவில் கோரிக்கையின மக்களவை தலைவருக்கு தரவேண்டும். மேலும் 50 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தரும் பட்சத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதத்திற்கு தேதி அறிவிக்கப்படும். ஆதரவு கிடைத்த 10 நாட்களுக்குள் விவாதம் நடைபெற வேண்டும். இல்லையென்றால் விவாதம் ஒத்தி வைக்கப்பட்டது பற்றி அந்த உறுப்பினருக்கு தகவல் அளிக்கப்படும்.
மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மை நிரூபிக்கபடவில்லை என்றால் உடனே ஆட்சி கலைக்கப்படும்.
தற்போது மக்களவையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள...