வாட்ஸ்ஆப் அட்மினா நீங்கள்? உங்கள் குழு உறுப்பினர்களால் நீங்கள் சிறை செல்லும் வாய்ப்புகள் அதிகம்!

தீங்கு விளைவிக்கும் வகையில் பகிரப்பட்ட குறுஞ்செய்தியால் சிறை சென்ற வாட்ஸ்ஆப் குரூப் அட்மின்.

By: July 24, 2018, 11:24:41 AM

வாட்ஸ்ஆப் குரூப்பின் அட்மின்களாக நீங்கள் இருந்தால், உங்கள் குழுவில் பதியப்படும் செய்திகளை முன்கூட்டியே சரியா தவறா என்று அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழுவில் தவறான செய்திகள் அல்லது கருத்துகள் பதியப்படுவதை மிக விரைவில் தடை செய்யுங்கள். ஃபார்வர்ட் செய்யப்படும் குறுஞ்செய்திகளை கவனமாக கையாளுவது நலம். இல்லை என்றால் நீங்கள் சிறை செல்ல நேரிடும்.

ஜூனைத் கான் என்ற 21 வயது பி.எஸ்சி படிக்கும் மாணவன் வாட்ஸ்ஆப் க்ரூப் ஒன்றின் அட்மினாக செயல்பட்டு வருகிறார். மத்தியபிரதேச மாநிலம், ராஜ்கர் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் பலர் இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அந்த குழுவில் இர்பான் என்ற 17 வயது மாணவன் வன்முறையை தூண்டும் வகையில், தேசத்திற்கு எதிரான முறையில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இர்பான் மீதும் அந்த வாட்ஸ்ஆப் குழு அட்மின் மீதும் நடவடிக்கைகள் எடுக்குமாறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிந்து, அந்த குரூப் அட்மின் கைது செய்யப்பட்டார்.

ஐந்து மாதங்கள் சிறை தண்டனை பெற்ற ஜூனைத் கானால் தன்னுடைய கல்லூரி தேர்வுகளை எழுத முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp group admin was in jail for last 5 months for a message posted in group by a member

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X