WhatsApp informed Priyanka Gandhi her phone could have been hacked Congress - ப்ரியங்கா காந்தி மொபைல் 'ஹேக்' செய்யப்பட்டது - வாட்ஸ் அப் தகவல்
பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலியை உலகம் முழுவதும் 150 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.
Advertisment
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்பட பல முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ்-அப் தகவல்கள், இஸ்ரேல் நிறுவனத்தின் மூலம் உளவு பார்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இது, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில், ப்ரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தியின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பியதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
Layers of BJP Govt’s conspiracy & collusion in the illegal & unconstitutional hacking of cell phones through surveillance software ‘Pegasus’ are unraveling everyday.
BJP Govt is the deployer & executor of this illegal & unconstitutional snooping & spying racket.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்ட கூறப்படும் காலத்திலேயே ப்ரியங்கா காந்தியின் மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் ப்ரியங்கா காந்திக்கு மெசேஜ் அனுப்பியுள்ளது. இஸ்ரேல் உளவு நிறுவனம் ஹேக் செய்ய உதவியது யார் என்பது குறித்த உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். மத்திய அரசு அமைதியாக இருப்பதில் அர்த்தமில்லை" எனக் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஸ்பைவேர் பெகாசஸைப் பயன்படுத்தி ஆபரேட்டர்கள் கண்காணிப்பதற்காக இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் குறிவைக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் உறுதிசெய்ததாக வியாழக்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.