உங்கள் ஸ்மார்ட்போனில் கடைசியாக வாட்சப் ஆப்பை எப்போதும் அப்டேட் செய்திருந்தீர்கள்...
போன வாரம் தான்னாலும், மறந்துருச்சுங்க என்று சொல்பவர்களானாலும் ஹேக்கிங் எனும் பேராபத்தில் முதலில் சிக்கப்போவது முதலில் நீங்க தான்!!!
ஏன் என்கிறீர்களா? இஸ்ரேலிய ஹேக்கர்கள் புதிதாக ஒரு bugயை உருவாக்கியுள்ளதாகவும், இதன்மூலமாக, வாட்சப் ஆப்பை ஹேக் செய்யும் வாய்ப்பு அதிகம் என வாட்சப் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வாட்சப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
இஸ்ரேலிய சைபர் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் NSO புதிதாக ஒரு bugயை உருவாக்கியுள்ளது. இந்த bugயை வைத்து, உங்கள் வாட்சப்பிற்கு அழைப்பு வரும். அதை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் கூட, உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள call logs, emails, messages, photos உள்ளிட்டவைகள் ஹேக்கர்களின் கையில் சிக்கும் அபாயம் உள்ளது.
இந்த bug, ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில் உள்ள வாட்சப்களை ஹேக் செய்யவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்சப் நிறுவனம் இந்த bugயை கடந்தமாதமே கண்டறிந்துவிட்டது. இதற்கான சாப்ட்வேர் அப்டேட்டை, கடந்த வெள்ளிக்கிழமையே சர்வரில் பதிவேற்றியது. யூசர்கள், தங்கள் வாட்சப்பை, இந்த புது வெர்சனை அப்டேட் செய்துகொள்ளுமாறு வாட்சப் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹேக் அபாயம் உள்ள வாட்சப் வெர்சன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள்
v2.19.134 அதற்கு முந்தைய வெர்சன்கள்
பிசினஸ் வாட்சப் - v2.19.44 அதற்கு முந்தைய வெர்சன்கள்
ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்கள்
v2.19.51 அதற்கு முந்தைய வெர்சன்கள்
பிசினஸ் வாட்சப் - v2.19.51 அதற்கு முந்தைய வெர்சன்கள்
விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள்
v2.18.348 அதற்கு முந்தைய வெர்சன்கள்
டிஜென் ஸ்மார்ட்போன்கள்
v2.18.15 அதற்கு முந்தைய வெர்சன்கள்
இந்த வாட்சப் வெர்சன் பயன்படுத்துபவர்கள் உடனடியாக தங்கள் வாட்சப்பை அப்டேட் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.