New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-2019-06-15T161009.321.jpg)
Whatsapp media download problems fixed
அதிகளவில் எஸ்எம்எஸ்களை அனுப்புவது, இந்த அப்ளிகேசனை தவறான வகையில் பயன்படுத்துவது தெரிந்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்
Whatsapp media download problems fixed
வாட்சப் அப்ளிகேசன் மூலம் அதிகமான பேருக்கு ஒரே நேரத்தில் எஸ்எம்எஸ் அனுப்பும் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்சப் அப்ளிகேசனை, பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் தன்வசப்படுத்தியது. வாட்சப் மூலம் அதிகளவில் போலிச்செய்திகள் மற்றும் பொய்யான தகவல்கள் பரவுவதாகவும், இதன்மூலம் மக்களிடையே ஒற்றுமைசீர்குலைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு எச்சரித்திருந்தது. அதன்படி, அந்நிறுவனம் சட்டஒழுங்குமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, வாட்சப் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிகளவில் எஸ்எம்எஸ்களை அனுப்புவது, இந்த அப்ளிகேசனை தவறான வகையில் பயன்படுத்துவது தெரிந்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று வாட்சப் நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தல் நேரத்தின்போது Free clone apps மற்றும் RM58 software tool களின் மூலம் ஒரேநேரத்தில் பல்லாயிரக்கணக்கான எஸ்எம்எஸ்கள் அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.