scorecardresearch

மாநிலங்களவைக்கு தலைமை தாங்கும் குடியரசுத் துணைத் தலைவரின் அதிகாரங்கள், செயல்பாடுகள்

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவைத் தலைவராக தலைமை தாங்கும்போது, அரசு சார்பாக பதிலளிப்பதும் மாநிலங்களை தலைமை அதிகாரியின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்களை மீறும் நடவடிக்கை என்றுகாங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

jairam ramesh, congress, adani, modi, rajya sabha, Mallikarjun Kharge, Rahul Gandhi

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே புதன்கிழமை மத்திய அரசை விமர்சித்துப் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மாநிலங்களவைத் தலைவரும் துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் இடையீட்டாளராகத் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டினார்.

மாநிலங்களைவையில் மல்லிகார்ஜுன் கார்கே கருத்தை எதிர்ப்பதற்கு ஜெகதீப் தன்கர் பலமுறை முயற்சி செய்தபோது, அரசின் சார்பாக மாநிலங்களவைத் தலைவர் எப்படி பதிலளிக்க முடியும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த விஷயத்தை ஆராய நாடாளுமன்றக் கூட்டு குழுவை அமைக்க மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை பாஜக வைத்ததற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, ஜெகதீப் தன்கர், “தேசிய நலன் சார்ந்த விஷங்களுக்கு மட்டுமே மாநிலங்களவை தளத்தை பயன்படுத்த வேண்டும்” என்று குறுக்கிட்டுப் பேசினார்.

இதற்கு மல்லிகார்ஜுன கார்கே, தன்னைவிட தேசியவாதி யாரும் கிடையாது என்று கூறினார். “நான் உங்கள் யாரையும்விட தேசபக்தி உள்ளவன்… நான் இந்த மண்ணின் மைந்தன், நான் மூல பாரதி.” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்துக்கள் நீக்கப்பட்டன. காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், அவைத் தலைவரின் சொந்த கருத்துக்களை நீக்க வெண்டும் என்று கேட்டார்.

அதானி குழுமம் மோசடி மற்றும் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தியதாக குற்றம் சாட்டிய ஹிண்டன்பர்க் அறிக்கையைக் குறிப்பிட்ட மல்லிகார்ஜுன கார்கே, அதனுடைய சொத்துகள் எப்படி 13 முறை அதிகரித்தது என்று கேள்வி எழுப்பினார். அப்போது ஜெகதீப் தன்கர், அவருடைய கருத்து அதிகாரப் பூர்வமானதா என்று மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேள்வி எழுப்பினர். “ஆவணங்களை அங்கீகரிக்காமல் தகவல்களைத் தவிர்ப்பதற்கு இந்த தளத்தை பயன்படுத்த யாரையும் அனுமதிக்க முடியாது” என்று ஜெகதீப் தன்கர் கூறினார்.

மேலும், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியதாவது: “உலகில் எங்கிருந்தோ வரும் இதுபோன்ற அறிக்கைகளின் அடிப்படையில் நாம் எதாவது செய்ய முடியுமா?… நம்முடைய (இந்தியாவின்) நிறுவனங்களை ஆராய்வதற்கு நீங்கள் யாருக்கு (உலகில்) உரிமை அளிக்கிறீர்கள்.” என்று கூறினார்.

மோடி அரசாங்கம் பொதுத்துறையை விட மிகக் குறைவான எண்ணிக்கையிலான தொழிலாலர்களைப் பயன்படுத்தும் அதானி குழுமத்தை ஏன் ஊக்குவிக்கிறது என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியபோது, ஜெகதீப் தன்கர் மீண்டும் பதிலளித்தார். எந்தவொரு நிறுவனத்திற்கும் எந்தவொரு ஒழுங்கற்ற ஒப்பந்தங்களையும் வழங்குவதை சரிபார்க்க இந்தியாவில் ஒரு வலுவான அமைப்பு உள்ளது என்றார். நம்முடைய வெளிப்படையான, பொறுப்புணர்வு மற்றும் வலுவான பொறிமுறையை இயக்க நாடாளுமன்றம் பயன்படுத்தப்படக்கூடாது என்று நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நான் காலாண்டுத் தகவல்களைப் பெற்றுள்ளேன்” என்று ஜெகதீப் தன்கர் கூறினார்.

அப்போது காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கேட்டார்: “நீங்கள் அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்க முடியாது” என்று கூறினார்.

மாநிலங்களவைத் தலைவரின் அதிகாரங்களும் செயல்பாடுகளும்

மாநிலங்களவை வலைத்தளத்தின்படி, மாநிலங்களவைத் தலைவர் அல்லது குடியரசு துணைத் தலைவர் அவையின் கௌரவம் மற்றும் கண்ணியத்தை எதிர்க்காமல் பாதுகாப்பவர். அவர் அவையின் முதன்மை செய்தித் தொடர்பாளர் ஆவார். இது வெளி உலகிற்கு கூட்டுக் குரலைக் குறிக்கிறது. சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு விதிகள், நடைமுறைகள் மற்றும் அவைக்கு ஏற்ப சபையின் நடவடிக்கைகள் நடத்தப்படுவதை அவர் உறுதிசெய்கிறார்… தனது கடமைகளின் ஒரு பகுதியாக, கேள்விகளைக் கேட்பதற்கும் முழுமையான பதில்களைப் பெறுவதற்கும் உறுப்பினர்களின் உரிமைகள் நன்கு அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்கிறது சலுகை விஷயங்கள் மற்றும் பிற நடைமுறை பதில்கள் குறித்த முடிவுகள் அடங்கும்.

மேலும், “அவைத் தலைவர் தனது முடிவுகளுக்கான காரணங்களைக் கூற வேண்டிய கட்டாயம் இல்லை. அவைத் தலைவரின் முடிவுகளைக் கேள்வி கேட்கவோ அல்லது விமர்சிக்கவோ முடியாது. தலைவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சபையை அவமதிப்பு ஆகும்.” என்று விதிகள் கூறுகின்றன.

சபை விவாதங்களில் பங்கு

இது குறித்து விதிகள் கூறுவதாவது: “அவைத் தலைவர், தலைமை அதிகாரியாக தனது கடமைகளை நிறைவேற்றுவதைத் தவிர, சபையின் விவாதங்களில் பங்கேற்க மாட்டார். இருப்பினும், எழுப்பப்படும் ஒழுங்கு விஷயத்தின் பேரில் அல்லது அவர் சொந்தமாக, உறுப்பினர்களின் விவாதங்களில் உதவுவதற்காக பரிசீலனையில் உள்ள ஒரு விஷயத்தில் அவர் எந்த நேரத்திலும் சபையில் உரையாற்றலாம்.” என்று கூறுகிறது.

அவையில் ஒழுங்கை பேணுதல்

அவைத் தலைவரின் அடிப்படைக் கடமை என்று கூறும் விதிகள், “உறுப்பினரின் பேச்சில் பொருத்தமற்ற தன்மையை சரிபார்த்தல் அல்லது திரும்பத் திரும்ப பேசுதல், உறுப்பினர் தேவையில்லாமல் பேசும்போது தலையிடுதல் போன்ற விதிகளின் கீழ் தேவையான அனைத்து ஒழுங்குமுறை அதிகாரங்களும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவதூறான கருத்துகளைத் திரும்பப் பெறச் சொல்வதற்கு அதிகாரங்கள் அளிக்கப்படுள்ளன. விவாதத்தில் பயன்படுத்தப்படும் பாராளுமன்றத்திற்கு புறம்பான அல்லது கண்ணியமற்ற வார்த்தைகளை நீக்குமாறு அவைத் தலைவர் உத்தரவிடலாம் அல்லது உறுப்பினர் ஒருவர் தனது அனுமதியின்றி கூறுவது பதிவு செய்யக் கூடாது என்றும் உத்தரவிடலாம். ஒழுங்கீனமான நடத்தையில் ஈடுபடும் எந்தவொரு உறுப்பினரையும் சபையில் இருந்து வெளியேறும்படி அவர் வழிநடத்தலாம் மற்றும் இடைநீக்கம் செய்ய ஒரு உறுப்பினரை பெயரைக் குறிப்பிடலாம்” என்று கூறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: When vice president jagdeep dhankhar presides over a house

Best of Express