சமூக வலைதளத்தில் போட்டோ, வீடியோ அரசியல் 24 மணி நேரமும் விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், காத்மாண்டுவில் எடுக்கப்பட்ட ராகுல் காந்தியின் 12 வினாடி வீடியோவை பாஜக இணையத்தில் ட்ரெண்ட் செயது வருகிறது.
உதய்பூரில் மே 13 அன்று நடைபெறவிருக்கும் மூன்று நாள் “சிந்தன் ஷிவிர்” நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில், ராகுலின் “நண்பரின்” திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவால், கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் அவரது சகாக்களில் பலர், ராகுல் காந்தியின் “தயக்கமற்ற மற்றும் வராத” தலைவர் என்ற பிம்பத்தைப் பற்றி நீண்ட காலமாக கவலைப்பட்டு வருகின்றனர். அவர் அரசியல் பணிகளில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்கிற பேச்சுகளும் சமூக வலைதளத்தில் உலாவுகிறது. விமர்சனங்களுக்கு ஏற்றப்படி, அவரது வெளிநாட்டு பயணங்கள் பெரும்பாலும் மறைக்கப்படுகின்றன.
ஜனவரி 3 அன்று பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஒரு பேரணியுடன் ராகுல் தொடங்குவார் என்று அக்கட்சி அறிவித்தது. ஆனால், அவர் இல்லாததை விளக்குவது கட்சிக்கு கடினமாக இருந்தது. அது பேரணியை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலையை உருவானது.
பிப்ரவரி 2020 இல், வடகிழக்கு டெல்லி கலவரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அமைதி ஊர்வலம் நடத்தியபோது ராகுல் வெளிநாட்டில் இருந்தார்.
அதே ஆண்டு நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரின் போது சோனியாவின் வருடாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக அவர் வெளிநாட்டில் இருந்தார். அந்த நேரத்தில் தான், சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன
டிசம்பர் 28 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினமாகும். 2020இல், அந்நாளை கொண்டாட கட்சி முழு ஏற்பாடு செய்திருந்தது. மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனி கட்சிக் கொடியை ஏற்றவிருந்தார். ஆனால், நிறுவன தினத்துக்கு சில நாள் முன்பு ராகுல் நாட்டை விட்டு வெளியேறினார்.
2019 டிசம்பரில் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போதும் ராகுல் நாட்டில் இல்லை. ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்களுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி வத்ரா தலைமையில் இந்தியா கேட்டில் கட்சி தர்ணா நடத்தப்பட்டது.
அதே நேரத்தில் ஜார்கண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பிரியங்கா ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரனுடன் இணைந்து பேரணியில் உரையாற்றினார். அப்போது ராகுல், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவுடன் சியோலுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக சென்றிருந்தார்.
அதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியேறிய சமயத்திலும், கட்சிக்கு பெரிதாக நல்ல நேரம் எட்டவில்லை. ஏனெனில் அது ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவின் சட்டப்பேரவை தேர்தலுக்கு நடுவே ஏற்பட்டது. ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் தான் நியமனம் செய்யப்பட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டது ராகுலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போது, ஹரியானாவில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் சவாலை அளித்தாலும், மகாராஷ்டிராவில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.
எல்லா தோல்வியை காட்டிலும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விக்கு பிறகு, ராகுல காந்தி ஓய்வுக்காக மாயமானார். சுமார் 57 நாள்கள் அந்த பயணம் நீடித்தது. இதுவரை, அது எங்கே, ஏன் என்பது இன்னும் தெரியவில்லை.
இளவரசர் என்று அடிக்கடி கேலி செய்யும் ராகுலின் வெளிநாட்டுப் பயணங்கள் பாஜக மட்டுமின்றி மற்ற நட்புக் கட்சிகளும், போர் நடக்கும் அரங்கில் ராகுலின் சுய இலக்குகளை கண்டு விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில், ஒரு காலத்தில் காங்கிரஸுடன் இணைந்த UPA இப்போது இல்லை என்று வாதிடுகையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, நீங்கள் அதிக நேரம் வெளிநாட்டில் இருக்க முடியாது என கருத்து தெரிவித்திருந்தார்.
ராகுலின் பயணத்தை கண்டறிய பாஜக தரவுகளையும் பயன்படுத்தியது. 2019 நவம்பரில், சிறப்பு பாதுகாப்புக் குழு (திருத்தம்) மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, SPGக்கு தெரிவிக்காமல் 2015 மற்றும் 2019 க்கு இடையில் இந்தியாவில் 1,892 முறையும், 247 முறை வெளிநாடுகளும் ராகுல் பயணம் செய்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று(மே.3) பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தலைவரான அமித் மால்வியா, ராகுல் இரவு விடுதியில் இருக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு, அவரது சமீபத்திய பயணத்தைப் குறித்து முதலில் சலசலப்பைத் தொடங்கினார்.அதில், மும்பை கைப்பற்றப்பட்டபோதும் ராகுல் காந்தி இரவு விடுதியில் இருந்தார். அவரது கட்சியில் பிரச்னை வெடிக்கும் நேரத்திலும். இரவு விடுதியில் இருக்கிறார். அவர் நிலையானவர் என ட்வீட் செய்திருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறை தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலாவிடம் கேட்டபோது, ராகுல்காந்தி தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தான் நமது நட்பு நாடான நேபாளத்துக்கு சென்றுள்ளார். பிரதமர் மோடியைப் போல அழையா விருந்தாளியாக, பாகிஸ்தான் பிரதமரின் பிறந்த நாள் விழாவில் கேக் வெட்டச்செல்லவில்லை என கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் பேசிய அவர், வெளிநாட்டில் குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் திருமணம், நிச்சயதார்த்த விழாக்களில் கலந்துகொள்வது நமது கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் விஷயம்.நம் நாட்டில் திருமணம் செய்துகொள்வது, ஒருவருடன் நட்பு கொள்வது அல்லது அவர்களின் திருமண விழாவில் கலந்துகொள்வது இன்னும் குற்றமாக மாறவில்லை. ருவேளை இன்றைக்குப் பிறகு, திருமணத்தில் கலந்துகொள்வது சட்டவிரோதம் என்று பிரதமர் மோடியும், பாஜகவும் முடிவெடுக்கலாம். நண்பர்கள் அல்லது குடும்ப விழாக்களில் பங்கேற்பது குற்றம் என்று கூறலாம் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil