scorecardresearch

கொரோனா பரவலை அடியோடு நிறுத்தி விடாது மக்கள் ஊரடங்கு: நிபுணர்கள் கருத்து

இன்றைய ஜனதா ஊரடங்கு உத்தரவு ஒரு ஆயத்த பயிற்சியாக கருதலாம்.வைரஸ் பரிமாற்ற சங்கிலியை உடைக்க வாரங்கள்,மாதங்கள் அளவிலான ஊரடங்கு தேவை.

Janata curfew in and around India corona virus

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை 7 மணி முதல் ‘மக்கள் ஊரடங்கு’ தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், இந்த ஒருநாள் ஊரடங்கு கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்கும் என்ற கூற்றை நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்று ஒருநாள் வீட்டிலேயே இருப்பதன் மூலம் வைரஸுடனான தொடர்பை பலரால் குறைக்கமுடியும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், கொரோனா வைரஸ்  நிலைமை இன்னும் மோசமடைந்தால், ஒரு முழுமையான லாக்டவுன் சூழலுக்கு நம்மை தயார் செய்ய, இன்றைய நாள் ஒரு பயிற்சியாக இருக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

இருப்பினும், இந்த ஒருநாள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று சங்கிலியை உடைப்பது என்று கூறுவது மிகைப்படுத்தல் ஆகும். ஏன்….. பிரதமரே தனது உரையில் அத்தகைய கூற்றை எதுவும் கூறவில்லை .

எய்ம்ஸ் நிறுவனத்தின் நுண்ணுயிரியல் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஷோபா ப்ரூரின் இது குறித்து கூறுகையில்,” மக்களிடையே தொடர்பு ஒரு நாள் துண்டித்துவிட்டால் வைரஸ் இறந்துவிடும் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. வைரஸ் தொற்றின் பரவல் குறையும் என்று எடுத்துக் கொள்ளலாமலே தவிர, பரவல் சங்கிலியை முற்றிலுமாக நிறுத்தி விட்டோம் என்று பொருள்கொள்ள முடியாது. ‘தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ வெளியிட்டுள்ள மருத்துவ ஆய்வறிக்கையில்,வைரஸ் ஒரு இடத்தில் 20-22 மணி நேரத்திற்குப் பின் இறந்துவிடும் என்று கூறவில்லை. அமைச்சகம் இந்த விஷயத்தை மிகைப்படுத்தியதாக தெரிகிறது” என்று தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்,”பிரதமர் விடுத்துள்ள ஜனதா ஊரடங்கு மூலம் கொரோனா வைரஸ் தொற்று சங்கிலி உடைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அகர்வால் கூறுகையில், சமூக ஒன்று கூடல்களை தவிர்ப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை சிறந்த முறையில் தவிர்க்கலாம். பிரதமரின் ‘ஜனதா ஊரடங்கு’ கோரிக்கையின் மூலம் சமூக ஒன்று கூடல்களை தவிர்க்கும் பழக்கம் மக்களிடம் நடைமுறைபடுத்தப் பட்டுள்ளது.… இந்த ஒரு நாள் முயற்சி……இந்த ஒரு நாள் பயிற்சி… கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதற்கான ஒரு பெரும் உதவியை நமக்கு வழிவகுக்கும்,”என்றார்.

ஆங்கிலத்தில் படிக்க: ‘Janata Curfew social distancing drill… won’t break chain of transmission’: Experts question claims

அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள் உட்பட பல அரசாங்க செயற்பாட்டாளர்களும் அகர்வாலின் கூற்றை மீண்டும் மீண்டும் வலியுறித்தி வருகின்றனர். உதரணமாக, இந்திய துணைக் குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு கடந்த சனிக்கிழமையில், “வைரஸ் பரவுவதை திறம்பட கட்டுப்படுத்த சமூக ஒன்று கூடல்களை தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி கூறிய ‘ஜனதா ஊரடங்கு அமைந்துள்ளது” என்றார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமிய சுவாமிநாதன்,கூறுகையில் “இது (மக்கள் ஊரடங்கு உத்தரவு) ஒரு ஆயத்த பயிற்சியாக கருதலாம்.வைரஸ் பரிமாற்ற சங்கிலியை உடைக்க வாரங்கள்,மாதங்கள் அளவிலான ஊரடங்கு தேவை. ஊரடங்கு உத்தரவைத் தாண்டி, அதிகமான மக்களை ஆய்வக சோதனை செய்தல், அறிகுறி உள்ளவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்தல், வெகுஜனக் கூட்டங்களைத் தவிர்த்தல், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியவர்களைப் பாதுகாத்தல், அவசியமில்லாத பயணங்களைத் தவிர்த்தல்” போன்ற பல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகிறார்.

மேற்பரப்புக்கு வந்த எந்தவொரு வைரஸும் நீண்ட காலம் வாழும். எனவே, வெறும் 14 மணிநேர ஊரடங்கு காலளவு ( ஏன்…. 24 மணிநேரமாக நீட்டிக்கப் பட்டாலும் கூட) வைரஸின் ஆயுளைத் தீர்மானிக்காது என்பதற்கு பல அறிவியல் சான்றுகள் உள்ளன.

உதாரணமாக, மார்ச் 17 அன்று நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், “SARS-CoV-2 காப்பர் மற்றும் மர அட்டைகளை விட பிளாஸ்டிக் மற்றும் எஃகு (ஸ்டைன் ஸ்டீல்)-ல் அதிக நிலைத்தன்மையோடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மேற்பரப்பில் அதிகபட்சம் 72 மணி நேரம் வரை வைரசால் தாக்குபிடிக்க முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

14 மணி நேர காலம் ஊரடங்கு, கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்குமா? என்ற கேள்வியை “தி சண்டே எக்ஸ்பிரஸ்” நாளிதழ் மின்னஞ்சல் வாயிலாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் வைராலஜி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் அவர்களிடம் கேட்டது. அதற்கு அவர் “இல்லை” என்ற ஒற்றை வரியில் பதிலளித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Whether janata curfew breaks corona virus transmissio chains