விலங்குகள் மூலமாக கொரோனா உருவாக்கம்: WHO ஆய்வு

உலக சுகாதார நிறுவனம் சீனாவுடன் இணைந்து, கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, பல விடை தெரியாத கேள்விகளை எழுப்புவதோடு, வைரஸின் தோற்றம் குறித்தான உறுதிப்படாத அனுமானங்களுக்கும் வழி வகுக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் குறித்தான பல்வேறு ஆய்வுகளை உலக சுகாதார நிறுவனமும், அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களும் மேற்கொண்டு வருகின்றன. முந்தைய ஆய்வுகளின் படி, விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் சூழலில், அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரியவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின் மூலம், கண்டறியப்படாத விலங்கு ஒன்றிடமிருந்து, வெளவால்களுக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் பரவல் ஆய்வகத்திலிருந்து பரவியதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் சீனாவுடன் இணைந்து, கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, பல விடை தெரியாத கேள்விகளை எழுப்புவதோடு, வைரஸின் தோற்றம் குறித்தான உறுதிப்படாத அனுமானங்களுக்கும் வழி வகுக்கிறது. இருப்பினும், ஆய்வுக் குறித்தான அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடுவதில் சீனா தாமதித்து வருவதால், வைரஸ் பரவல் குறித்தான குற்றச்சாட்டுகளை தடுக்க சீனா முயற்சித்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அடுத்த சில தினங்களில் அறிக்கை வெளியிடப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Who china research corona virus orgin report countries

Next Story
பினராயி விஜயனுக்கு நெருக்கடி: கேரள தேர்தல் களத்தில் ‘சபரிமலை’யின் தாக்கம் என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com