Advertisment

அமைச்சரவை மாற்றம்: புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் யார்?

பா.ஜ.க-வைச் சேர்ந்த 70 வயதான அர்ஜுன் ராம் மேக்வால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சராக இருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Arjum Ram Meghwal, who is Arjum Ram Meghwal, அர்ஜுன் ராம் மேக்வால், புதிய சட்ட அமைச்சர், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு மாற்றம், Kiren Rijiju, law minister, Arjum Ram Meghwal law minister, union law minister, cabinet reshuffle

புதியதாக நியமிக்கப்பட்ட மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்

பா.ஜ.க-வைச் சேர்ந்த 70 வயதான அர்ஜுன் ராம் மேக்வால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சராக இருந்தார்.

Advertisment

மத்திய அமைச்சரவையில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். அர்ஜுன் ராம் மேக்வால் முன்பு நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத் துறைக்கான மத்திய அமைச்சராக இருந்தார்.

தற்போது சட்ட அமைச்சகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அர்ஜுன் ராம் மேக்வால், இதற்கு முன்பு கேபினெட் அந்தஸ்தில் பதவி வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க தலைவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். அவர் நிர்வாகப் பணிகளில் நுழைந்து ராஜஸ்தான் அரசாங்கத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

70 வயதான தலைவர் அர்ஜுன் ராம் மேக்வால், பிரதமர் மோடி முதல் 5 ஆண்டு பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்ற விவகாரங்கள், நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சராக பணியாற்றினார். மேலும், பத்தாண்டுக்களுக்கு மேலாக பா.ஜ.க-வில் உறுப்பினராக உள்ளார்.

2009 ஆம் ஆண்டில், பிகானரில் இருந்து மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக மேக்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 16-வது மக்களவைக்கு 2014 பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2வது முறையாக எம்.பி.யாக இருந்தபோது, மக்களவையில் பா.ஜ.க-வின் தலைமை கொறடாவாக இருந்தார். சபாநாயகர் அவரை கீழ் அவையின் அவைக் குழு தலைவராகவும் பரிந்துரைத்தார்.

வியாழக்கிழமை காலை ராஷ்டிரபதி பவனில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “கிரண் ரிஜிஜுவுக்குப் பதிலாக, தற்போதுள்ள இலாகாக்களுக்குப் பதிலாக, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் அமைச்சராக நியமிக்கப்படுகிறார்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Cabinet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment