Advertisment

முதல்முறை எம்.எல்.ஏ குஜராத்தின் அடுத்த முதல்வர், யார் இந்த பூபேந்திர படேல்?

குஜராத் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பூபேந்திர படேல், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Who is Bhupendra Patel, next Gujarat Chief Minister Bhupendra Patel, யார் இந்த பூபேந்திர படேல், குஜராத்தின் அடுத்த முதல்வர் பூபேந்திர படேல், பூபேந்திர படேல், பாஜக, பிரதமர் மோடி, Gujarat Chief Minister Bhupendra Patel, Gujarat CM Bhupendra Patel, Gujarat, BJP, PM Modi

குஜராத் முதல்வர் பதவியிலிருந்து விஜய் ரூபானி ராஜினாமா செய்ததையடுத்து திரத் சிங் ராவத் (உத்தரகண்ட்) மற்றும் பிஎஸ் எடியூரப்பா (கர்நாடகா) ஆகியோருடன் 2 மாதங்களில் வெளியேறும் மூன்றாவது பாஜக முதல்வர் என்று வரிசையில் சேர்ந்துள்ளார். விஜய் ரூபானி ராஜினாமா செய்த ஒரு நாள் கழித்து முதல் முறையாக எம்எல்ஏ-வான பூபேந்திர பட்டேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை காந்திநகரில் நடைபெற்ற பாஜக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Advertisment

குஜராத் மாநிலத்தில் உள்ள காட்லோடியா சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ பூபேந்திர படேல் (59) அகமதாபாத்தில் உள்ள மேம்நகர் நகராட்சி தலைவர் பதவியையும் அகமதாபாத் மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் நிலைக்குழுத் தலைவர் பதவியையும் வகித்துள்ளார்.

பூபேந்திர படேல் 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காட்லோடியா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சஷிகாந்த் படேலை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, அந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.

பூபேந்திர படேல் பட்டிதார் சமூகத்தின் உட்சாதியான கட்வா சமூகத்தைச் சேர்ண்தவர். பட்டேல், சிவில் இன்ஜினியரிங் டிப்ளோமா படித்தவர்.

பிரதமர் நரேந்திர மோடியைப் 20 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் முதல்வராக இருந்தபோது அமைச்சராக இருந்ததில்லை. அவரைப் போல படேலும் இதற்கு முன்னர் எப்போதும் அமைச்சர் பதவியை வகித்ததில்லை. தற்போது பிரதமராக இருக்கின்ற நரேந்திர மோடி, அன்றைக்கு அக்டோபர் 7, 2001ல் முதல்வராக பதவியேற்றார். பிப்ரவரி 24, 2002 அன்று ராஜ்கோட் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

குஜராத் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பூபேந்திர படேல், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவித்தார். குஜராத்தின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் திங்கள்கிழமை முதல்வராக பதவியேற்கிறார்.

விஜய் ரூபானிக்கு பிறகு பூபேந்திர படேல் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூபாணிக்கு முன்பு, கர்நாடகாவின் எடியூரப்பா, மற்றும் உத்தரகாண்டின் திரத் சிங் ராவத் மற்றும் திரிவேந்திர ராவத் ஆகியோர் முதலமைச்சராக இருந்த காலத்தை முடிப்பதற்கு முன்னரே விலகினர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Narendra Modi Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment