கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே10ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஜெகதீஷ் ஷெட்டருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தொடர்ந்து, அவர் காங்கிரஸிற்கு தாவக் கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில் ஹூப்ளி-தர்வாட் மத்திய சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகாவின் முக்கிய லிங்காயத் தலைவர்களுள் ஒருவரான ஜெகதீஷ் ஷெட்டர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், 6 முறை எம்.எல்.ஏ, பல்வேறு காலகட்டங்களில் அமைச்சர் என பல்வேறு சிறப்புகளை பெற்றவர் ஆவார்.
அதாவது இவர், சித்தராமையா தலைமையிலான அரசாங்கத்தின் போது 2014 முதல் 2018 வரை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் (LoP) பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து, 2008-09 வரை சபாநாயகராகவும், 2019-21 வரை எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றியவர் ஆவார்.
1955 ஆம் ஆண்டு பாகல்கோட் மாவட்டத்தின் பாதாமி தாலுகாவில் உள்ள கெரூர் கிராமத்தில் பிறந்த ஷெட்டர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) ஆகியவற்றின் தீவிர உறுப்பினராகப் பணியாற்றி தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆவார்.
இந்நிலையில், 1994 ஆம் ஆண்டு ஹூப்ளி ரூரல் தொகுதியில் இருந்து 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் முறையாக மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் முறையே 25,000 மற்றும் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர், 2008 முதல், ஷெட்டர் ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
மேலும், ஷெட்டர் பிப்ரவரி 2006 முதல் அக்டோபர் 2007 வரை வருவாய் அமைச்சராகவும், 2009 முதல் 2012 வரை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் பணியாற்றினார்.
20 ஆண்டுகளுக்கும் மேலான வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்ட சட்டப் பட்டதாரியான ஷெட்டர், தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார்.
ஷெட்டர் சமீபத்தில் கிளர்ச்சியான தொனியில், ஹூப்ளி-தார்வாட் மத்திய தொகுதியில் தனக்கு டிக்கெட் மறுத்தால், குறைந்தபட்சம் 20 முதல் 25 இடங்களில் பாஜகவின் முடிவுகள் பாதிக்கப்படும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“