scorecardresearch

காங்கிரஸில் இணையும் பா.ஜ.க. துணை முதலமைச்சர்? யார் இந்த லட்சுமணன் சாவடி?

பா.ஜ.க மூத்தத் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான லட்சுமணன் சாவடி காங்கிரஸில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Who is Laxman Savadi the former Karnataka deputy CM who quit BJP and is set to join Congress
கர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமணன் சாவடி

கர்நாடகத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமணன் சாவடிக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. சீட் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஏப்.14) காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா ஆகியோரை அவர் பெங்களூருவில் சந்தித்துப் பேசினார். இதனால், அவர் காங்கிரஸிற்கு திரும்புவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது பாஜக எம்.எல்.சி. ஆக உள்ள லட்சுமணன், அத்தானி சட்டப்பேரவை தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும் 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். அந்த காங்கிரஸ் வேட்பாளர் குமத்தள்ளி பின்பு பா.ஜ.க. திரும்பி, 2019-ல் எடியூரப்பா மீண்டும் ஆட்சியமைக்க உதவினார்.

பி.எஸ். எடியூரப்பாவின் நம்பிக்கைக்குரியவரான லட்சுமணன் சாவடி, 2019-2021வரை கர்நாடகத்தின் துணை முதலமைச்சராகவும், போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
லட்சுமணன் சாவடி, 2012-ல் சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கினார். இது பெரும் சர்ச்சையானதை அடுத்து அப்போது தனது அமைச்சர் பதவியை இழந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Who is laxman savadi the former karnataka deputy cm who quit bjp and is set to join congress

Best of Express