மனுஷி சில்லார் கடந்து வந்த நீண்ட நெடும் பாதை: 10 சுவாரஸ்ய தகவல்கள்

17 ஆண்டுகள் கழித்து ஹரியானாவின் மனுஷி சில்லார் உலக அழகி பட்டத்தை வென்றிருக்கிறார். அவர் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.

By: November 19, 2017, 12:03:00 PM

பிரியங்கோ சோப்ரா கடந்த 2000-ஆம் ஆண்டு உலக அழகி போட்டியை வென்று வெற்றி வாகை சூடினார். அதன்பின், இந்தியாவிலிருந்து யாரும் உலக அழகியாக வெற்றி பெறவில்லை. பார்வதி ஓமனக்குட்டன் 2008-ஆம் ஆண்டு உலக அழகிப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இப்படியிருக்கும்போது, 17 ஆண்டுகள் கழித்து ஹரியானாவின் மனுஷி சில்லார் உலக அழகி பட்டத்தை வென்றிருக்கிறார். அவர் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.

1. மனுஷி சில்லார் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.

2. கடந்த 2017-ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்றார் மனுஷி சில்லார்.

3. இவரது பெற்றோர் மருத்துவர்களாவார். பள்ளிப்படிப்பை டெல்லியில் உள்ள புனித தாமஸ் பள்ளியில் படித்தார். தற்போது, ஹரியானா மாநிலம் சோன்பேட்டில் உள்ள பகத் பூல் சிங் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.

4. சீனாவின் சன்யா நகரத்தில் கோலாகலமாக நடைபெற்ற உலக அழகிப்போட்டியில், 108 நாடுகளை சேர்ந்த பெண்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் மனுஷி சில்லார்.

5. 2016-ஆம் ஆண்டின் உலக அழகியான போர்ட்டோரிகா (Puerto Rico) நாட்டின் மாடல் அழகி ஸ்டெஃபானி டால் வாலஸ் டியாஸ், மனுஷி சில்லாருக்கு கிரீடத்தை சூடினார்.

6. 21 வயதான மனுஷி சில்லார், இறுதிப்போட்டியில் மற்ற 4 நாடுகளை சேர்ந்த அழகிகளுடன் போட்டியிட்டார்.

7. இந்தியா, இங்கிலாந்து, கென்யா, மெக்ஸிகோ ஃபிரான்ஸ் ஆகிய 5 நாடுகளை சேர்ந்தவர்கள்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர்கள்.

8. மனுஷி சில்லாரின் சகோதரர், சகோதரி உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் இறுதிப் போட்டியின்போது உடனிருந்தனர்.

9. இறுதிப்போட்டியில் மனுஷி சில்லாரிடம் கேட்கப்பட்ட கேள்வி: உங்களை பொறுத்தவரை அதிக சம்பளம் தரப்படுவதற்கு தகுதியான வேலை எது?”

பதில்: ”அம்மாவுக்கு பெரும் மரியாதையை அளிக்க வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் சம்பளம் குறித்து கேட்கிறீர்கள். ஆனால், அது எப்போதும் பணமாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. ஆனால், அது நீங்கள் தரும் அன்பு மற்றும் மரியாதையாகவும் இருக்கலாம். என் வாழ்க்கையில் என்னுடைய அம்மா பெரும் உந்துதலாக எப்போதும் இருந்திருக்கிறார். எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்காக பலவற்றை தியாகம் செய்திருக்கின்றனர். அதனால், அம்மாக்களுக்குத்தான் அதிக சம்பளம் தர வேண்டும் என நான் நினைக்கிறேன்”.

10. கடந்த 2017-ஆம் ஆண்டு உலக அழகிப்போட்டியில் பங்கேற்ற மனுஷி சில்லாருக்கு, குறிப்பிட்ட விருது வழங்கப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Who is manushi chhillar meet haryana girl who bagged meet miss world 2017 crown

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X