இஸ்லாமியர்கள் இந்தியாவில் வாழ அனுமதி கொடுப்பதற்கு மோகன் பகவத் யார் என்று ஹைதரபாத் எம்பி ஒவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் மாத இதழுக்கு நேற்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேட்டி அளித்தார். இந்நிலையில் அவர் பேசியது தொடர்பாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இஸ்லாமியர்கள் இங்கே வாழ வேண்டும் என்றால், அவர்களது தனியுரிமையை கைவிட வேண்டும் என்று மோகன் பகவத் பேசினார் . மேலும் இந்துகள் கிட்டதாட்ட 1000 வருடங்களாக போரில் இருகின்றனர் என்றும் இந்துக்கள் ஆக்ரோஷமாக இருப்பது இயற்கை என்றும் பேசினார்.
மேலும் இந்துஸ்தான் எப்போதும் இந்துஸ்தானாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இவரது பேச்சுக்கு காங்கிரஸ் இதுவரை மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. சிபிஐஎம் கட்சி கடும் கண்டங்களை தெரிவித்துள்ளது. ” இந்திய சட்டத்தின்படி எல்லா மக்களுக்கும் வாழ சம உரிமை உண்டு. ஆனால் இதற்கு எதிராக மோகன் பகவத் பேசியுள்ளார். மேலும் அவர் பேச்சு ஆணவத்தின் உச்சம். மத வெறியை தூண்டும் விதமாக பேசியுள்ளார். மேலும் சிறுபான்மையினருக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கிறார்” என்று சிபிஐஎம் கட்சி விமர்சித்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக சிபிஐ மாநில செயலாளர் டி.ராஜா கூறுகையில் “ இதுபோன்ற பேச்சால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவர் மீறுகிறார். இந்து மக்கள் வெளியே இருப்பவர்களுடன் போர் செய்ய அவசியமில்லை என்றும் நமக்குள்தான் போர் என்று கூறுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ்-யின் பிரித்து ஆழும் கொள்கை வெளிப்பட்டுவிட்டது. இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளை நாம் ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும் “ என்று அவர் கூறியுள்ளார் .
இந்நிலையில் ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில் “ இந்தியாவில் இஸ்மியர்கள் வாழ அனுமதி கொடுக்க மோகன் பகவத் யார்? அல்லாவின் அருளால் இந்தியாவில் நாங்கள் இருக்கிறோம். இந்திய குடிமக்கள் மீது கட்டுபாடுகள் விதிக்க அவர் யார்? நாங்கள் யாரிடமும் பணிந்துபோக வேண்டும் என்ற தேவையில்லை “ என்று அவர் பதிவிட்டுள்ளார்.