Advertisment

இஸ்ரோவின் ரகசியங்களை விற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நம்பி நாராயணன் யார் ?

சந்திரயானை விண்ணில் ஏவிய ராக்கெட்டில் நம்பி நாராயணன் வடிவமைத்த எஞ்சின் தான் பொருத்தப்பட்டிருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நம்பி நாராயணன்

நம்பி நாராயணன்

நம்பி நாராயணன் ஓர் அறிமுகம்

Advertisment

1941ம் ஆண்டு நாகர் கோவிலில் பிறந்தவர் நம்பி நாராயணன். சென்னை பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பினை முடித்தவர் நாராயணன்.  இஸ்ரோவில் அப்துல் கலாம் தலைமையில் திட எரிபொருள் ஆராய்ச்சி நடைபெற்று வந்த அதே சமயத்தில் திரவ எரிபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தவர் நம்பி நாராயணன்.

திரவ எரிபொருள் மூலம் ராக்கெட்டினை விண்ணில் செலுத்த உதவும் க்ரயோஜெனிக் எஞ்சின் தொழில்நுட்பத்தை கண்டறிந்தவர் நாராயணன் நம்பி. இந்த க்ரயோஜெனிக் எஞ்சின் உதவியால் தான் தற்போது பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் இந்தியாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.  விக்ரம் சாராபாய் அவரின் நினைவாக க்ரையோஜெனிக் எஞ்சின்களுக்கு விகாஸ் என்று பெயரிட்டுள்ளனர் இந்திய விண்வெளித் துறையினர்.

க்ரையோஜெனிக் எஞ்சின் என்றால் என்ன?

கடும் குளிர்விப்பு நிலையில் எரிபொருட்களை பயன்படுத்தும் எஞ்சின் கிரையோஜெனிக் எஞ்சின் என்று அழைக்கப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தினை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர் நம்பி நாராயணன் ஆவார். எப்போதும் வெளிநாடுகளில் இருந்து தான் இது போன்ற எஞ்சின்களை விலைக்கு வாங்குவோம்.

Read more : To read this article in English

ரஷ்யாவிடம் இருந்து இந்த எஞ்சின்கள் மற்றும் தொழில்நுட்பத்தினை விலைக்கு வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஃபிரான்ஸ் நாடுகள் எதிர்ப்பு தெவித்தன. இதனைத் தொடர்ந்து எஞ்சின்கள் மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அந்த சமயத்தில் நம்பி நாராயணனின் ஆராய்ச்சி அடிப்படையில் தான் புதிதாக எஞ்சின்கள் கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகின. அவர் கண்டறிந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தான் தற்போது இந்தியாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளில் பயன்படுத்தி வருகிறது இஸ்ரோ நிறுவனம்.

Read more : நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம் 

2008ம் ஆண்டு நிலவிற்கு அனுப்பபட்ட சந்திராயன் செயற்கைக் கோளை தாங்கிச் சென்ற பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் இந்த எஞ்சின் தான் பொருத்தப்பட்டது.

ஏன் கைது செய்யப்பட்டார் நம்பி நாராயணன் ?

க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தினை உருவாக்கிய நாராயணன் அதே தொழில் நுட்ப ரகசியங்களை ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு விற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி கேரள காவல்துறை அவரை கைது செய்தது.  சிறையில் இருந்த 50 நாட்கள், விசாரணை என்ற பெயரில் அவருக்கு கடுமையான சித்திரவதை கொடுக்கப்பட்டது.

சிபிஐ கைக்கு வழக்கு மாறியவுடன் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து அவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்.  ஆனாலும் பல்வேறு காரணங்களால் இஸ்ரோவில் நம்பிக்கு எந்த ஒரு முக்கிய பொறுப்பும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 2001ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

நம்பி நாராயணன் நம்பி நாராயணன் சார்பில் வாதாடிய உன்னி கிருஷ்ணன்

சட்ட ரீதியாக போராடிய நம்பி

அதன் பின்னர் கேரள மாநிலக் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்தார். அதில் “தன்னுடைய வேலையில் திறமையை முடக்கும் விதமாகவும் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அவமானம் ஏற்பட்ட விதமாகவும் நடந்து கொண்டதிற்காகவும்” மான நஷ்ட வழக்கினை தொடுத்தார் நம்பி நாராயணன். இதனை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் நம்பியின் கைது தேவையற்றது என்றும், அவர் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகள் கண்டனத்திற்கு உரியது என்று கூறியது.

மேலும் அவர் மீது விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட கேரள காவல்துறை உயர் அதிகாரிகள் நஷ்ட ஈடாக ரூபாய் 50 லட்சத்தினை நம்பி நாராயணுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது. மேலும் அவர் மீது தொடங்கப்பட்ட சட்ட விரோத வழக்கு குறித்தும் சிறையில் கொடுக்கப்பட்ட சித்ரவதைகள் குறித்து விசாரிக்கவும் முன்னாள் நீதிமதி ஜெய்ன் தலைமையிலான குழு அமைத்தும் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

தன்னுடைய இக்கட்டான காலங்களில் நிகழ்ந்த அனைத்தையும் ஓர்மகலுடே ப்ரமநபதம் என்ற சுய சரிதம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார் நம்பி நாராயணன்.

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment