பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
யார் இந்த நிதி திவாரி?
2014-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் அதிகாரியான நிதி திவாரி, நவம்பர் 2022-ல் பிரதமர் அலுவலகத்தில் உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டார், மீண்டும் ஜனவரி 2023-ல் பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது தனிப்பட்ட செயலாளர் பதவிக்கு உயர்த்தப்படும் வரை நிதி திவாரி, பிரதமர் அலுவலகத்தில் துணை செயலாளராக பணியாற்றி வந்தார்.
மார்ச் 29 அன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட குறிப்பாணையின்படி, பிரதமரின் தனிச் செயலாளராக அவரது நியமனம் அமைச்சரவையின் நியமனக் குழுவால் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டது.