சமூக ஊடக புரட்சியாளர் முதல் சாதாரண ஆசிரியர் வரை; பாராளுமன்ற பாதுகாப்பு மீறல் மாஸ்டர் மைண்ட் லலித் ஜா பின்னணி
சமூக ஊடகங்களில் புரட்சியாளர், கொல்கத்தாவில் உள்ள அக்கம் பக்கத்தினருக்கு மென்மையாக பேசும் ஆசிரியர்; பாராளுமன்ற பாதுகாப்பு மீறலில் மூளையாக செயல்பட்ட லலித் ஜாவின் பின்னணி
சமீபத்திய நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் முக்கிய குற்றவாளியான லலித் ஜா (நடுவில்) புதுதில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். (பி.டி.ஐ)
"அமைதியை" அடைவதற்கான வழிமுறையாக "போர்" என்று சமூக ஊடகங்களில் புரட்சிகர மேற்கோள்களை வெளியிடும் யாரோ ஒருவர் முதல் கொல்கத்தா சுற்றுப்புறங்களில் பெரிதாக அறியப்படாத மற்றும் மென்மையாக பேசும் ஆசிரியர் வரை, புதன் கிழமை பாராளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு மூளையாக செயல்பட்டதாக்க் கூறப்படும் லலித் ஜாவின் (37) ஆளுமை வேறுபட்டது.
பீகாரின் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த லலித் ஜா (37), கொல்கத்தாவில் சுமார் இரண்டு தசாப்தங்களாக வசித்து வருகிறார், நவம்பர் 24 அன்று ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் அறியப்படாத கவிஞரான பிக்ரம் சிங் 'நாராயனிண்' வரிகளான, "அமைதியை உங்கள் அன்புரிக்குரியதாக மாற்றுங்கள், ஆனால் தயங்க வேண்டாம்போரிடுவதற்கு. போரிடுவதைத் தவிர்ப்பவர்கள்தான் அதிகம் ஒடுக்கப்படுகிறார்கள்" என்று எழுதினார்.
Advertisment
Advertisements
நவம்பர் 5 அன்று லலித் ஜா ஒரு பதிவில், “மக்களின் உரிமைகளைப் பற்றி பேசுபவர்கள் கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்படுவார்கள்,” என்று எழுதினார்.
நவம்பர் 1 அன்று லலித் ஜா தனது இன்ஸ்டாகிராமில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படங்களுடன் போட்ட மற்றொரு பதிவு, “ஒரு தனிமனிதன் ஒரு சித்தாந்தத்திற்காக இறக்கலாம். ஆனால் அந்த சித்தாந்தம் அவர் இறந்த பிறகு ஆயிரம் உயிர்களாக அவதாரம் எடுக்கும்”.
இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவேற்றிய அவரது கடைசி பதிவு, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் மற்றும் ஊடுருவல்காரர்கள் கோஷம் எழுப்பும் வீடியோவாகும்.
சுவாமி விவேகானந்தரின் புகைப்படத்தை தனது சுயவிவரப் படமாக வைத்து, அவர் அக்டோபர் 26 அன்று, “இந்தியாவுக்குத் தேவை வெடிகுண்டுகள், ஒடுக்குமுறைக்கு எதிரான உயர்ந்த குரல்” என்று எழுதினார்.
மேலும், லலித் ஜா ஆயுதப்படை கொடி தினம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் ஜதீந்திரநாத் முகர்ஜியின் (பாகா ஜதின்) பிறந்த நாளை டிசம்பர் 7 அன்று கொண்டாடினார்.
ஆனால் கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் கடந்த ஆண்டு வரை வாடகை வீட்டில் வசித்து வந்த அவரது அண்டை வீட்டாருக்கு லலித் ஜா முற்றிலும் மாறுபட்ட நபராக இருந்தார். 37 வயதான லலித் ஜா பாகுயாட்டியில் ஒரு வாடகை குடியிருப்பைக் கொண்டிருந்தார், அங்கு அவர் புரோஹிதராக பணிபுரியும் தந்தை தேபானந்த் ஜா, தாய் மற்றும் இளைய சகோதரர் சோனு ஆகியோருடன் வசித்து வந்தார். திருமணமான லலித்தின் மூத்த சகோதரர் ஷம்பு ஜா தனி குடும்பமாக வாழ்ந்து வருகிறார். லலித் ஜா டியூஷன் எடுத்ததால் உள்ளூரில் "மாஸ்டர்ஜி" என்று அழைக்கப்படுகிறார், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அவரை அடக்கமான மென்மையாக பேசும் நபராக அறிந்தார்கள்.
லலித் ஜா தனது குடும்பத்துடன் தங்கியிருந்த கொல்கத்தாவின் புறநகரில் உள்ள பகுஹாட்டியில் பூட்டிய வீடு. (எக்ஸ்பிரஸ் கோப்பு புகைப்படம்)
டிசம்பர் 10 அன்று, லலித் ஜா தனது பாகுயாட்டி நில உரிமையாளரான ஷெஃபாலி சர்தாரிடம், தனது குடும்பம் பீகாரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு இரண்டு மாதங்களுக்குச் சென்று வருவதாகவும், ஆனால் அவர் தொடர்ந்து கொல்கத்தாவில் தங்குவதாகவும் கூறினார். அன்று மாலை தனக்கு டெல்லியில் ஏதோ அவசர வேலை இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் வந்துவிடுவதாகவும் கூறிவிட்டு வாடகை வீட்டை விட்டு வெளியேறினார்.
ஷெஃபாலி சர்தார் கூறுகையில், “டிசம்பர் 10 அன்று, திரு தேவானந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் பீகாரில் உள்ள அவர்களின் மூதாதையர் கிராமத்திற்குச் சென்று இரண்டு மாதங்கள் அங்கு தங்குவதாகக் கூறினர். லலித் இங்கே இருப்பார், அவர் வாடகை கொடுப்பார் என்று என்னிடம் கூறப்பட்டது. அவர்களை ஹவுரா ஸ்டேஷனில் விடுவதற்காக லலித் ஜா தனது பெற்றோருடன் சென்றார். ஆனால் அதே மாலையில் அவர் மூன்று நான்கு நாட்களுக்கு டெல்லி செல்வதாக கூறினார், என்றார்.
பாகுயாட்டியில் உள்ள லலித்தின் பக்கத்து வீட்டுக்காரரான மோனிகா டே, “அவர்கள் அனைவரும் நல்ல மனிதர்கள். லலித் மோசமான நடத்தையில் ஈடுபடுவதை நாங்கள் பார்த்ததில்லை. ஆனால், அவருடைய படங்களை டிவியில் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தோம். எங்கள் வாக்குமூலத்தை போலீசார் இங்கு வந்து பதிவு செய்துக் கொண்டனர்,” என்று கூறினார்.
புர்ராபஜாரைச் சேர்ந்த வர்த்தகரான ராஜேஷ் சுக்லா கூறுகையில், “சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர் என்பதால் மாஸ்டர்ஜி அப்பகுதியில் நடக்கும் அனைத்து வகையான சமூகக் கூட்டங்களிலும் கலந்துகொள்வார். நேற்று அவரை முதன்முதலில் டிவி சேனல்களில் பார்த்தபோது, குறைந்தது மூன்று முறையாவது சரிபார்த்துக் கொண்டேன். பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் வழக்கில் அவரது பெயரையும் முகத்தையும் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அப்போதிருந்து, பலர் நான் அவருடன் இருக்கும் புகைப்படங்களை ஒரே பிரேமில் எனக்கு அனுப்பியுள்ளனர். என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு எளிய மனிதராகத் தோன்றினார்,” என்று கூறினார்.
லலித் ஜா வசித்த பூட்டிய ஒரு அறைக் குடியிருப்பைக் கொண்ட பாழடைந்த புர்ராபஜார் கட்டிடத்தின் நான்காவது மாடியில் வசிக்கும் அனுஜ் அகர்வால், “லலித் ஜா ஒரு ஆசிரியர் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததில்லை. குழந்தைகளுக்கு எல்லா பாடங்களையும் சொல்லிக் கொடுப்பார்,” என்று கூறினார்.
“மாஸ்டர்ஜி அறத்துடன் வாழும் மனிதராகத் தோன்றினார். நான் பார்க்கும் போதெல்லாம் இன்பங்களைப் பரிமாறிக் கொள்வார். அவர் ஒரு மென்மையான பேசும் நபர், ”என்று பெயர் வெளியிட விரும்பாத உள்ளூரைச் சேர்ந்த ஒரு கடைக்காரர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“