பக்தர்களின் மனதை புண்படுத்திய முகநூல் பதிவு... கைது செய்யப்பட்ட ரெஹானா ஃபாத்திமா...

சபரிமலை சர்ச்சையால் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகும் பாத்திமா

ரெஹானா பாத்திமா கைது : எப்படியும் ஐயப்பன் கோவிலை அடைவேன் என்று நினைத்து தான் வந்தேன் என்று வருத்தத்துடன் வீடு திரும்பிய ரெஹானா பாத்திமா யார்?  சபரிமலை விவகாரத்தில் போராட்டக்காரர்கள் மிகவும் தீர்க்கமுடன் செயல்பட்டு வரும் நிலையில், நேற்று சபரிமலை கோவிலுக்கு செல்ல 31 வயது நிரம்பிய ரெஹானா பாத்திமா என்ற மாடல் முயற்சி செய்திருக்கிறார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவர் தான் இந்த ரெஹானா பாத்திமா. வேற்று மதத்தைச் சேர்ந்தவரும், சமூக செயற்பாட்டாளரும், மாடலுமான இவரை எப்படி கோவிலுக்குள் விட இயலும் என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கொச்சியில் இருந்து 5 மணி நேரம் பயணம் செய்து பத்தினம்திட்டா வரை வந்திருக்கிறார். ஆனால் பலமான எதிர்ப்பு கிளம்பவும் அவர் கொச்சிக்கு திரும்பி சென்றார். இந்நிலையில் அவருடைய வீடு மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

பெண்ணியவாதியான அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ”சமூக செயற்பாட்டார்கள் தங்களில் ஆதிக்கத்தை காட்டுவதற்கான இடம் ஐயப்பன் கோவில் இல்லை” என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

யாரிந்த ரெஹானா பாத்திமா ?

ரெஹனா பாத்திமா என்றவுடன் முகநூலில் அவரை வசைப்பாட தொடங்கிவிட்டனர். கேரளாவில் பொது இடத்தில் காதலர்கள் முத்தமிட்டு போராட்டம் நடத்திய கிஸ் ஆஃப் லவ்வில் பங்கேற்றவர்.

அதே போல், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த போது, ஐயப்ப பக்தர்கள் போலவே கருப்பு நிற உடை அணிந்து, ஒரு போட்டோ சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்திருந்தார். அந்த புகைப்படம் அமைந்த விதமும் அதில் பதியப் பட்டிருந்த கருத்துகளும் முறையாக இல்லை போன்ற காரணங்களால் ரெஹானா பாத்திமாவின் மீது பலரும் பல்வேறு விதமான கருத்துகளை முன்வைக்கின்றனர்.

பெண்கள் அணியும் ஆடை குறித்து கேரளாவில் இருந்த பேராசிரியர் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர் தான் இந்த ரெஹானா ஃபாத்திமா. அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

கட்டுப்பாடான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஃபாத்திமா விஷ்வ ஹிந்து பரிசானில் சேந்து அத்வைத்தா மற்றும் வேதாந்த சித்தங்களை கற்றுத் தேர்ந்தவர். இந்து மதத்தினை பின்பற்றி வருகின்றேன் என்பதால் தான் காவல்துறையினர் என்னை சபரிமலைக்கு அழைத்துச் சென்றனர் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

பொறுப்பான தாயாக திகழ்பவர் ரெஹானா பாத்திமா

ரெஹானா பாத்திமா

ரெஹானா பாத்திமா மற்றும் அவரின் குழந்தைகள்

என்னதான் பெண்ணியவாதியாக இருந்தாலும் வீட்டில் ஃபாத்திமா மிகவும் வித்தியசமானவர். இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும், பொறுப்பான மனைவியாகவும் நடந்து கொள்வார். என்னுடைய பெற்றோற்களும், அவருடைய தாயரும் எங்களுடன் ஒரே வீட்டில் தான் தங்கியிருக்கிறார்கள் என ரெஹானாவின் கணவர் மனோஜ் ஸ்ரீதரன் கூறியிருக்கிறார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ரெஹானா…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற ரெஹானாவை இந்து மக்களின் நம்பிக்கையை புண்படுத்தியதிற்காக ஜாமத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். தற்போது  கொச்சினில் வேலை செய்து வந்த ஃபாத்திமாவை தற்போது பலரிவட்டோம் பகுதியில் இருக்கும் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அலுவலகத்திற்கு மாற்றம் செய்திருக்கிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.

ரெஹானா பாத்திமா கைது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைத் தொடர்ந்து தன்னுடை முகநூல் பக்கத்தில், ஐயப்ப பக்தர்களின்  மனதினை புண்படுத்தும் வகையில் பதிவு ஒன்றினை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று பத்தினம் திட்டா பகுதியில் இருந்த அவரின் இல்லத்தில் வைத்து காவல் துறையினர் ரெஹானா ஃபாத்திமாவினை கைது செய்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close