கோவிட்-19 நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அளிப்பது நிறுத்தம்: உலக சுகாதார நிறுவனம்

ஒருங்கிணைந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில், கோவிட்-19 நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அளிப்பதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள சான்றுகள் மறு ஆய்வு செய்தவுடன் இந்த அறிவிப்பு நீக்கப்படும்.

By: Updated: May 26, 2020, 12:53:49 PM

ஒருங்கிணைந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில், கோவிட்-19 நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அளிப்பதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள சான்றுகள் மறு ஆய்வு செய்தவுடன் இந்த அறிவிப்பு நீக்கப்படும்.

முன்னதாக, கோவிட்-19 நோயாளிகளுக்கு பரவலாக அளிக்கப்பட்ட குளோரோகுயின் சிகிச்சை முடிவுக்கு வரும். இந்த முடிவு ஒருங்கிணைந்த சோதனை நிர்வாகக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டது.

நாவல் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தப்படுவதால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று தொடர்ச்சியாக சோதனைகள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு வந்துள்ளது. இருப்பினும், இந்தியா தொடர்ந்து சுகாதாரப்  பனியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் கோவிட்-19 நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நோய்த்தடுப்புக்கு இந்த மருந்து தொடர்ந்து பயன்படுத்துகிறது. இது, அஜித்ரோமைசினுடன் சேர்த்து, கடுமையான நிகழ்வுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான இந்தியாவின் விருப்பமான மருந்தாக தொடர்கிறது.

இந்த முடிவெடுக்கும்போது பரிசீலிக்கப்பட்ட சான்றுகளில், கடந்த வாரம் தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆய்வும் ஒன்று. அதில், கோவிட்டுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றாலும், இதயத் துடிப்பில் ஏற்ற இறக்கங்களில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்படுத்தும் பக்க விளைவு குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிட்-19-க்கான மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு தனியாக அல்லது ஒரு மேக்ரோலைடுடன் பயன்படுத்தப்படும்போது, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அல்லது குளோரோகுயினால் விளையும் பலனை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளது.

இந்த மருந்து விதிமுறைகள் ஒவ்வொன்றும் மருத்துவமனையில் உயிர்வாழ்வதை குறைக்கிறது. மேலும், இந்த மருந்து கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்போது வென்ட்ரிகுலர் அரித்மியாக்களின் அதிகரித்த அதிர்வெண் ஆகியவற்றுடன் தொடர்புள்ளது” என்று ஆராய்ச்சியாளர்கள் தி லான்செட்டில் தெரிவித்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் பி.எம்.ஜே.யில் மற்றொரு ஆய்வு, கோவிட்-19 நோயாளிகளுக்கு இந்த மருந்து குறிப்பிடத்தக்க சாதகமான பலனை தருவதாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த மருந்தை பெறாதவர்களைக் காட்டிலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பெற்றவர்களுக்கு பாதகமான நிகழ்வுகள் அதிகம் என்று கூறியது.

இருப்பினும், மார்ச் 17 அன்று சர்வதேச ஆண்டிமைக்ரோபையல் முகவர்களின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், பிரெஞ்சு விஞ்ஞானிகள் இவ்வாறு தெரிவித்தனர்: “இந்த ஆய்வில் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். மேலும் கட்டுப்பாடுகளுடன் ஒப்பிடும்போது டி 6-போஸ்ட் சேர்த்தலில் வைரஸின் வேகத்தை கணிசமாகக் குறைத்தது. மேலும், இந்த இதழில், இந்த மருந்தின் மூலம் சிகிச்சையளிக்கப்படாத நோயாளிகளின் அறிக்கையை விட மற்றவர்களில் மிகக் குறைந்த சராசரி காலம் வைரஸ் இருப்பதைக் காட்டியது. ஹைட்ராக்ஸி குளோரோகுயினில் சேர்க்கப்பட்ட அஜித்ரோமைசின் வைரஸ் ஒழிப்புக்கு மிகவும் திறமையாக செயல்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்பது முடக்கு வாதம் மற்றும் லூபஸ் போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இது மலேரியாவைத் தடுப்பதற்கும் மலேரியா சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மலேரியா எதிர்ப்பு மருந்து. குளோரோகுயின் ஒரு வகை எதிர்ப்பு மருந்து ஆகும். சமீபத்தில், கோவிட்-19 இன் சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகியவற்றில் அதன் பங்கு ஆராயப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Who suspends allocation of covid 19 patients to hydroxychloroquine

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X